Header Ads



விஷேட தேவையுடையோர்க்கு, கரம்கொடுக்கும் அல் - ஜன்னாஹ் (மரணம் வரை வழிகாட்ட தயாரென அறிவிப்பு)


உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சோதனைகளால் சோதிக்கப்படுகின்ற நிலையில், விஷேட தேவையுடைய பிள்ளைகள் மூலம் அவர்களின் பெற்றோர் சோதிக்கப்படுகின்றார்கள். இவ்வாறான பிள்ளைகளைப் பெற்றோர் அவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்க, கல்வியைக் கொடுக்க முடியாமல் நிர்க்கதியான நிலையிலேயே இருக்கின்றனர்.

அந்த வகையில், விஷேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர், இறைவனால் தமக்கு வழங்கப்பட்டுள்ள சோதனையில் வெற்றி பெற்று, உயர்ந்த சுவர்க்கத்தை அடைய சேவை புரியும் நன்னோக்கத்துடன் அஷ்-ஷெய்ஹ் ஸப்ரி தஸ்லீம் அவர்களால் 2018 மார்ச் 14 ஆம் திகதி, ஒரேயொரு கண்பார்வையற்ற மாணவரைக் கொண்டு “அல்-ஜன்னாஹ் நிலையம்” ஆரம்பிக்கப்பட்டது.

வாய் பேச முடியாத, கண் பார்வையற்ற, மூளை வளர்ச்சி குன்றிய, விஷேட தேவையுடைய பத்து மாணவர்கள் தற்போது இங்கு கல்வி பயில்கின்றனர். விழிப்புலனற்ற மாணவர்களுக்கு பிரெய்ல் (Brail) முறையிலும், செவிப்புலனற்ற மாணவர்களுக்கு செய்கை மொழி மூலமும் கியூட் முறையிலும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றது. ஏனையோர்க்கு விஷேட அணுகுமுறைகள் மூலமும் கற்பிக்கப்படுகின்றன.

“ஆன்மீக நோக்கத்தை நிறைவேற்றவும், விஷேட தேவையுடையோரின் வாழ்க்கைத் தேர்ச்சி, உடற்பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி என்பவற்றை பூர்த்தி செய்யும் நிலையமாகவும் “அல்-ஜன்னாஹ் நிலையம்” விளங்குகின்றது. அங்கவீனம்/ மாற்றுத் திறனாளர்/ விஷேட தேவையுடையோர்” ஆகிய சொற்பதங்கள் இந்நிலையத்தின் பெயர் பலகையில் பொதிக்கப்படாமல், கௌரவமான முறையில் நோக்கும் வகையில், "அல்-ஜன்னாஹ் நிலையம் என்றே இங்கு பெயர் இடப்பட்டிருக்கின்றது. மேலும், எதிர்காலத்தில் பொது சமூகத்தின் மத்தியில் இவர்கள் சஞ்சரிக்கும் பொழுதுகளில் ஏற்படக்கூடிய நிலைமைகளை சமாளிக்கும் பக்குவமும் இங்கு வழங்கப்படுகின்றது” என இதன் ஸ்தாபகர் தெரிவிக்கின்றார்.

இம் மாணவர்களின் பெற்றோர்களுக்கான முதல் கூட்டம் மே மாதம் 06 ஆம் திகதி வெற்றிகரமாக இடம்பெற்றது. அடுத்து ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 03 ஆம் சிறுவர் தின நிகழ்ச்சியொன்றும் கல்வி அமைச்சு வழங்கிய தொனிப்பொருளிலேயே சிறப்பாக இடம்பெற்றது. வழிகாட்டல்களற்ற விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு மரணம் வரை வழிகாட்ட இதன் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும், அவ்வாறான மாணவர்கள் கட்டாயம் உடன் இணைந்துகொள்ளுமாரும் இவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். "அல்-ஜன்னாஹ்" - இது விஷேட தேவையுடையோர்க்கான சுவர்க்கம்.

நிர்வாக உறுப்பினர்கள்

அஷ்-ஷெய்ஹ் சப்ரி தஸ்லீம் (இஹ்ஸானி) - ஸ்தாபக தலைவர்

எம்.ஜே.எம். ருஷ்தீன் (J.P) – செயலாளர்

எம்.என்.எம். இஷாம் (J.P) – பொருளாளர்

மற்றும் ஏனைய உறுப்பினர்கள்.

கல்வி புகட்டுவோர்

ஆசிரியை எம்.என். அப்ரா

ஆசிரியை எம்.என்.எப். ஸுல்பா

முகவரி: 49/12, தக்கியா வீதி, போருதோட்ட, கொச்சிக்கடை


தொடர்புகளுக்கு: அஷ். சப்ரி தஸ்லீம் – 0752223370, 0771001518





2 comments:

Powered by Blogger.