முஸ்லிம்களை பார்த்து, பொறாமைப்படும் விக்னேஸ்வரன்
-பாறுக் ஷிஹான்-
சிங்கள ஆட்சியாளர்கள் கோவிப்பார்கள் என்ற காரணத்தினால் பொடிமெனிக்கே என்று மாற்றக்கூடிய சிந்தனையாளர்களே இன்று அம்மாச்சி என்ற பெரை மெல்ல நீக்கி பாரம்பரிய உணவகம் என மாற்ற முனைந்திருக்கின்றார்கள் என முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
காரைநகர் பிரதேசசபையின் கசூரினா சுற்றுலாமையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டட திறப்புவிழா நேற்று(24) நடைபெற்ற போது மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில்
இரண்டு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசும் போது அவர்களின் சம்பாசனைகள் ஜேர்மன் மொழியில் இருக்கும். அதேபோன்று இரண்டு ரஷ்ய நாட்டுநபர்கள் சந்திக்கும் போது ரஷ்ய மொழியில் பேசுவார்கள். இரண்டு ஆங்கிலேயர்கள் ஆங்கிலமொழியில் பேசுவார்கள். ஆனால் இரண்டு தமிழர்கள் ஒருவரை ஒருவர் வடகிழக்கிற்கு வெளியில் சந்திக்கும் போது தமிழில் பேசமாட்டார்கள். மாறாக ஆங்கிலத்திலோ அல்லது பிறிதொரு பாஷையிலோ தான் பெரும்பான்மையானவர்கள் பேசுவார்கள்.
ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் மற்றும் அலுவலர்களும் சுயமாகச் சிந்திக்கத் திராணியற்றவர்களாக அரசாங்கத்தின் அடிவருடிகளாக அவர்களைத் திருப்திப்படுத்துகின்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது. ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கின்றார்கள். நான் சிங்கள சகோதரர்களைக் குறைகூற வரவில்லை. என் தமிழ்ச் சகோதர சகோதரிகளின் வருத்தத்திற்குரிய செயற்பாட்டையே கூறவருகின்றேன்.
முஸ்லீம் இனத்தைச் சார்ந்த மக்கள் தாம் பல்வேறு கட்சிகளாக அரசியல் முன்னெடுப்புக்களில் பிரிந்து நின்று செயற்படுகின்ற போதும் முஸ்லீம் இனத்தின் நலனுக்கு எதிரான வகையில் ஏதாவது நிகழ்வுகள் அல்லது வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து தமது உரிமைக்கான ஏகோபித்த குரலை கொடுத்து தமது உரிமைகளை பெற்றுக் கொள்கின்றார்கள். எம்மவர்களோ மற்றையவர்களின் குலம் கோத்திரத்தை ஆராய்வதிலேயே பொழுதைக் கழிக்கின்றார்கள்.
திறந்து வைக்கப்பட்ட குறித்த உணவகத்திற்கு பாரம்பரிய உணவகம் என்றே அதிகாரிகள் பெயர் சூட்டியிருந்த நிலையில் அம்மாச்சியென பெயர் சூட்டாத பட்சத்தில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என முதலமைச்சர் கண்டிப்பாக கூறியதையடுத்துஇ அதிகாரிகள் அவசர அவசரமாக உணவகத்தின் பெயரை மாற்றிஇ அம்மாச்சி உணவகம் என பெயர் சூட்டியமை சுட்டிக்காட்டத்தக்கது.
We Muslims have unique identity .They will not sacrifice compromise any of their rights for petty benefits or opportunities. We have clear history. They have maintained it even under the rule of colonial times. Our present so called leaders may be opportunistic. But our community always unite safeguard their rights
ReplyDeleteWe Muslims have unique identity .They will not sacrifice compromise any of their rights for petty benefits or opportunities. We have clear history. They have maintained it even under the rule of colonial times. Our present so called leaders may be opportunistic. But our community always unite safeguard their rights
ReplyDeleteIt wud be much appreciable if Jaffna muslim webiste is introduced in english language also
ReplyDelete