முஸ்லிம்களை தூற்ற ஆரம்பித்துள்ள சிங்களவர்களும், அரசியல் நெருக்கடியும்
தெற்கில் ஏற்பட்ட பாரிய அரசியல் அதிர்வலையை அடுத்து,நாட்டு மக்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்பு கலந்த அசமந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த பிரதமர் யார்?என்ற தெரிவானது மீண்டும் ஒரு முறை சிறுபான்மை மக்களின் முடிவில் மட்டுமே தங்கி இருந்த நிலையில் இன்று ஹக்கீம்,மனோ மற்றும் ரிஸாட் ஆகியோர் தன் ரணில் சார்பு நிலைப்பாட்டை அறிவித்திருந்தனர்.இது மகிந்த அணிக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. ஏனெனில் நேற்றைய மாற்றத்தின் பின்னர் சு.கா இன் டிலான் உட்பட பல உறுப்பினர்கள் ஹக்கீம்,ரிசாட் இன் ஆதரவு தமக்கு கிடைக்கும் என பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.இதனை இணையத்தள செய்திகள் பிரதானமாக பிரசுரித்தது.
இந்த செய்தியினை மறுக்கும் முகமாக ஹர்சடி சில்வா போன்ற ஐ.தே.க இன் உறுப்பினர்கள் தொடர்சியாக ஹக்கீம் ரிசாட்,மனோ தன்னுடனே இருப்பதாக புகைப்படத்துடன் டிவிட்டர் பக்கங்களில் பதிவேற்றி வந்தனர்.
சிறுபான்மையின் ஆதரவு யாருக்கு என்ற தலைப்பு இன்று முடிவுக்கு வந்தவுடன் பெரும்பான்மை சகோதரர்களின் கோபம் நம் சமூகத்தின் மீது திருப்பி உள்ளதை சற்று உணர முடிகின்றது.
இதனை சமூக வலைத்தளங்களின் பின்னூட்டள்களில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து கூட கணிப்பிட கூடியதாக இருந்தது. இதில் நேற்று முழுவதும் 'ஹக்கீம் ஐயா உன்மையின் பக்கம் வாருங்கள்' 'முஸ்லிம் சகோதரர்கள் தேசத்தை நேசிப்பவர்கள் ' என்று கருத்துப்பட பின்னூட்டள்கள் இட்ட பெரும்பான்மை சகோதரர்கள் இன்று ' தம்பியோ' என்ற வாசகங்களின் மூலம் தூற்றி பின்னூட்டள்கள் இட்டமை இனை வைத்து அவர்களின் உள்ளத்தின் நிலை நமக்கு தெளிவாகிறது.
மேலும் நாட்டின் கடந்த கால வரலாற்றில் சாதரண பெரும்பான்மை மக்கள் எப்போதும் சுதந்திர கட்சிக்கு ஆதரவானவர்கள்.அதிலும் யுத்தத்தை வென்ற மகிந்த மீது அளாதி பிரியம் உடையவர்களாக காணப்படுகிறார்கள்.அத்தோடு அன்மைக்கால நாட்டின் போக்கு அவர்களுக்கு மகிந்தையின் பெறுமதியை மேலும் உணர்த்தி உள்ளது.
இந்த நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் போனதால் மகிந்த ஒரு பெறுமதி அற்றவராக மாற்றப்படும் சந்தர்பத்தில் அவர்களின் கோபம் தானாக சிறுபான்மையை நோக்கி நகரும்.அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை நோக்கிச் செல்லும்.
இந்த நிலையில் முஸ்லிம்கள் இருவிதமான தாக்குதல்களை எதிர் பார்க்க முடியும்.
ஒன்று மகிந்த ஆதரவு அணியினரின் கோபத்தினால் ஏற்படப் போகும் ஆபத்து.இது தானாகவே வம்புக்கு இழுத்தல்,இழி சொற்களால் முஸ்லிம்களை இகழ்தல் போன்ற வடிவில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாக மாற்றப்படவும் வாய்ப்புண்டு.இதைப் ரணில் பயண்படுத்தி மைத்திரியின் முடிவால் நம் நாடு கலவரத்தை நோக்கி நகருகிறது என்று கூறி சர்வதேசத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பி அனுதாபத்தை தேடவும் முயற்சிக்கலாம்.
அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு முஸ்லிம் தலைவர்களின் நிலைப்பாட்டை வாக்களிப்பு வரை தொடர்சியாக பேனுவதற்கு ,ஆங்காங்கே முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை மக்கள் மூலமாகவோ அல்லது பிக்குகள் மூலமாகவோ
தோற்றுவித்து விட்டு ,"மகிந்த வந்த பின் தன் இனவாத சக்திகள் மூலம் முஸ்லிம் மக்களை பலி தீர்க்கின்றார்'' என்ற வதந்தியை கட்டவிழ்த்து விடக்கூடும். இதன் மூலம் தன் அரசியல் இருப்பிடத்தை ரணிலிற்கு இலகுவாக பேண முடியும் . ஏலவே நேற்று கோத்தபாயவுடன் இனவாத பிக்கு இருந்த புகைப்படம் வைரல் ஆனமை இங்கு நினைவூட்டப்பட வேண்டிய விடயம் ஆகும்.
இவ்வாறான இக்கட்டான சூழ் நிலையில் முஸ்லிம்கள் சற்று அவதானத்துடன் தன் செயற்பாடுகளை முன்னெடுப்பது காலத்தின் தேவை.
அந்த வகையில் கிழக்கிற்கு வெளியே வாழும் இளைச்சர்கள் விழிப்புடன் நடப்பது,கூடி இருந்து கலந்துரையாடுவதை தவிர்ப்பது ,இரவு நேரங்களில் அவதானமாக இருப்பது போன்ற செயற்பாடுகள் நம் சமூகத்தினை பாதுகாக்க உதவும். மேலும் இது குறித்து பள்ளிவாயல்கள் ,சமூக அமைப்புக்கள் முன் நின்று செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
Zafnas Zarook
நல்ல கற்பனை எப்படியாவது தன் எஜமானர் வந்து விட வேண்டும் என்ற ஆசை யோசிக்க வேண்டாம். நல்லது நடக்கும் பணம் உள்ள பக்கம்.
ReplyDeleteகாபிர்கள் எப்ப முஸ்லிம்களை நேசித்துஇருக்கிறார்கள் தூற்றாமல் இருப்பதற்கு யாரு ஆட்சி செய்தாலும் அவர்கள் இஸ்லாத்திற்கும் அதை பின்பற்றுபவர்களுக்கும் எதிரானவர்கள் என்பதை சமூகம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.குட்டகுட்ட குணிந்தே பழக்கப்பட்டு விட்டும் அதேயே பழக்கப்படுத்தாமல் இருப்போம் எதிர்கால சந்ததிகளாவது கோழைத்தனத்திலிருந்து விடுபட்டவர்களாக இருக்கட்டும்.
ReplyDeleteநல்ல ஆலோசனை
ReplyDeleteSindkha vendeya vidayam
ReplyDeleteDear Zarook, are you thinking that we all forgot about what mahinda and his government did in past? Now you asking muslims to support mahinda again. This changes not happened by electron. It is just political play against democracy and constitution of country. We muslim should not support for this illegal movement.
ReplyDeleteமுஸ்லீம் அரசியல்வாதிகள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுதான் தற்போதைய கால சூழ்நிலைக்கு பொருத்தமானதாக அமையும்
ReplyDeleteDear Muslim & Tamil brothers we suffer lot during UNP government only. 1977 1983 and few months ago at Kandy.So our political leaders should think twice to support Mr.Ranil. also currently Srl economy below far becose of mismanagement of so called Mr. Ranil Malik samarawera Mangala and Kabir hasim
ReplyDelete