கொழும்பில் சிகிச்சைக்குவரும் பெண்களை, துஷ்பிரயோகம்செய்த வைத்தியருக்கு சிறைத் தண்டனை
சிகிச்சைக்கு வரும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட விசேட மருத்துவர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன அந்த தண்டனையை 25 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
இந்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சேவையாற்றிய சீன அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் டி.பீ.விஜேரத்ன என்பவருகே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவர் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி மேற்படி குற்றத்தை செய்துள்ளதாக கூறி சட்டமா அதிபர் வழக்கை தொடர்ந்திருந்தார்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வருந்துவதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Post a Comment