கட்டாருக்கான இலங்கை, தூதுவருக்கு எதிராக விமர்சனங்கள்
கட்டாருக்கான இலங்கையின் தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித்த ராஜபக்ச ஆகியோருடன் காணப்படும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ராஜபக்ச சகோதரர்களை வரவேற்றமை தொடர்பில் கட்டாருக்கான இலங்கை தூதுவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து தெளிவுப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
தோஹா - கட்டாரில் நடந்த CH&FC அணியின் நட்புறவு றக்பி போட்டியில் கலந்துக்கொள்ளவே தனது சகோதரர்கள் சென்றதாகவும் இவ்வாறான அவமதிக்கத்தக்க கருத்துக்களை தனது சகோதரர்களால் தாங்கிக்கொள்ள முடியாது எனவும் நாமல் கூறியுள்ளார்.
தோஹா றக்பி மற்றும் கால்பந்தாட்ட நிலையம், இந்த நட்புறவு போட்டிக்கு அழைத்திருந்துள்ளது.
அதில் கலந்துக்கொள்ள சென்றிருந்த இலங்கை றக்பி அணியை வரவேற்க தூதுவர் விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் CH&FC றக்பி அணியை சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment