ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து ஞானசாரருக்கு, பொதுமன்னிப்பு வழங்க வேண்டுகோள் விடுப்போம்
ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான வேண்டுகோளை முன்வைக்க உள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசாரணை 2016ஆம் ஆண்டு ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோது நீதிமன்றத்தில் அத்துமீறி ஊடகவியலாளரின் மனைவியை எச்சரித்த குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைகளின் நிறைவில் ஞானசார தேரர் குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 19 வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், இறுதியில் கடுமையான வேலைகளுடனான 6 வருடகால சிறைத்தண்டனையாக மாற்றபட்டது.
எனினும் இந்த தீர்ப்பிற்கு எதிராக ஞானசார தேரர் சார்பாக மேன்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேன்முறையீடு மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது மேன்முறையீடு நிராகரி்கப்பட்டது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பளித்து வடுதலை செய்யும்படியான கோரிக்கையை முன்வைக்கவிருப்பதாக மாகல்கந்தே சுதத்த தேரர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment