பிரசண்ட் போடுமாறு துப்பாக்கியால் மாணவன் மிரட்டியும், அசராத ஆசிரியை - அதிருகிறது பிரான்ஸ் (வீடியோ)
பிரான்சில் ஆசிரியையை மாணவன் ஒருவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வீடியோ ஒன்று வெளியான விடயத்தில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்.
பாரீஸின் தென் கிழக்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் ஆசிரியை ஒருவரை வருகைப் பதிவேட்டில் பிரசண்ட் போடுமாறு மிரட்டுவதும், இன்னொரு மாணவன் அவனது பின்னால் வந்து நின்று ஆபாசமாக சைகை காட்டுவதும் இன்னொரு நபரால் படம் பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த வீடியோவைக் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஒன்று அந்த மாணவன் ஆசிரியை மிரட்டும்போது அவர் பயப்பட்டதாகவே தெரியவில்லை.
அப்படியானால் இம்மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகி விட்டதா? அல்லது அவன் வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கியா?
அல்லது மாணவர்கள் பள்ளிகளில் தண்டிக்கப்படும் விதத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? அந்த ஆசிரியை நடந்து கொண்ட விதம் சரிதானா?
இந்த சம்பவத்திற்கு எவ்வாறு பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என பல கேள்விகளை மக்கள் எழுப்புகிறார்கள்.
Nancy என்னும் அந்த நகரின் மேயரான Laurent Henart அந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கல்விச் சமூகம் பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், அந்த சம்பவம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ளதோடு, அந்த சம்பவம் குறித்து தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு உள்துறை மற்றும் கல்வி அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஆபாச சைகை செய்த மாணவன் விடுவிக்கப்பட்டுள்ளான், துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மாணவன் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
Post a Comment