"ஞானசாரர் எதிராளிகளின் பலியாக ஆக்கப்பட்டுள்ளார்"
பணச் சலவைச் சட்டம் உட்பட அனைத்து சட்டங்களுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நபர்களை அடக்குவதற்கு மட்டுமா என பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதியான சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று -13- நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஞானசார தேரரும் எதிராளிகளின் பலியாக ஆக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே ஞானசார தேரர் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேர்ந்துள்ளது.
பௌத்த பிக்குமாரின் பிரச்சினைகள் பற்றி பேசவும் அந்த பிரச்சினைகளை தீர்க்கவும் பௌத்த சங்க நீதிமன்றத்தை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும்.
1948 ஆம் ஆண்டு முதல் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து தலைவர்களிடமும் பௌத்த சங்க நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பௌத்த சங்க நீதிமன்றம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி கொடுக்க வேண்டும். பௌத்த சங்க நீதிமன்ற சட்டத்தின் கீழ் பௌத்த பிக்குகளின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் பின்னணியை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
அதற்கு அப்பால் எமக்கு எந்த பேச்சும் இல்லை. 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் தலைவர்கள் உருவாகினார்.
பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன, பிரேமதாச, சந்திரிக்கா, மகிந்த ராஜபக்ச, தற்போதுள்ள மைத்திரிபால சிறிசேன இவர்களில் எவருக்கும் நாட்டில் வாழும் 75 வீதமான சிங்கள பௌத்த மக்களின் பிரதிநிதிகளான பௌத்த பிக்குகளின் பிரச்சினைகளை தீர்க்க பௌத்த சங்க நீதிமன்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் தேவை இல்லை.
இவர்களில் எவரும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தற்போதும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் இல்லை.
இதுதான் உண்மையான கதை. எதிர்காலத்திலும் பௌத்த சங்க நீதிமன்றத்தை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் எமக்கில்லை எனவும் மாகந்தே சுதத்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment