பெற்றோலிய தலைமையகத்தில் பதற்றம் - துப்பாக்கிச் சூட்டில் சிலர் படுகாயம்
கொழும்பு தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய கூட்டு தாபன தலைமையகத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன் போது அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அர்ஜூன ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteநாட்டில் இராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம்
.
நாட்டின் அரசியல் நெருக்கடி முதலாவது உயிரைக்காவு கொண்டுள்ளது. சற்று முன் நடைபெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகிந்த ,மைத்ரி,ரணில் ஆகிய மூவரும் பெரிய பொறியில் சிக்கியுள்ளனர் . பெரிய புள்ளி ஒன்று கைது செய்யப்படும் நிலை வலுப்பெற்று வருகிறது. இப்போதுள்ள நிலையில் மகிந்த தரப்பிற்கு பெரும்பான்மை இருப்பதாக தெரியவில்லை .அவ்வாறு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது .
இந்த நிலமையில் நவம்பர் 16 ஆம் திகதி எந்த வகையிலும் பாராளுமன்றத்தைக் கூட்ட மாட்டார்கள். தற்போதுள்ள அரசியல் யாப்பின்படி 4.5 வருடங்கள் முடியும் வரை பாரளுமன்றத்தை கலைக்க முடியாது .
எனவே தம்மைக் காப்பதற்கு இராணுவத்தைப் பயன்படுத்த நிறைய வாய்ப்பு உள்ளது .
நாட்டு மக்கள் நாட்டை இந்த நிலமைக்கு கொண்டு வந்த இந்த தலைவர்கள் மூவரையும் நம்பி நாட்டு மக்கள் பாதைக்கு இறங்கி மடத்தனமாக உயிர்களை இழக்கக்கூடாது.
JVP இந்த இடத்தில் மெளனம் காப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் நாட்டு மக்களை வழிநடாத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பை செய்யத் தவறியுள்ளனர் .அனுரகுமார திஸானாயக்கவிற்கு நன்றாக பேசத் தெரியும் ,செயற்படத் தெரியாது.
நாட்டில் உள்ள புத்தி ஜீவிகள் ,சிவில் சமூக அமைப்புகள் உடன் தலையீட்டு ஏற்படப்போகும் குழப்ப நிலமையை தடுத்து நிறுத்த வேண்டும்.