கொழும்பு அரசியலின், தற்போதைய நிலை இதுதான்
1.அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் ஜனாதிபதி மைத்ரிபால குழு பிசியாக உள்ளனர்ர்...
மஹிந்த மற்றும் பசிலுடன் அடிக்கடி ஆலோசனைகள் பெற்றாலும் இறுதியாக மைத்திரியே எந்தெந்த அமைச்சுக்களுக்கு அமைச்சர்களை நியமிப்பதென தீர்மானம் எடுப்பாராம்.
2.இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்கும் பிரதமர் மஹிந்த மாலை கொழும்பு திரும்பியவுடன் ஜனாதிபதியிடம் கலந்து பேசி புதிய அமைச்சரவை தொடர்பில் இறுதி பட்டியல் முடிவு செய்யப்படுமாம்..
3. ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்...
4. முக்கியமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பது , தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினை என்பன இதில் அடக்கம்... முதலாளிமார் சம்மேளனத்தினை நேரடியாக அழைத்து பேச மஹிந்த தீர்மானம் ...
5. தொண்டமான் , டக்ளஸ் தேவானந்தா , ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள்... அரவிந்த்குமார் மற்றும் மலையகத்தில் இருந்து இணையவுள்ள தமிழ் எம் பி ஒருவருக்கு பிரதியமைச்சுப் பொறுப்புக்கள்...
6. அலரி மாளிகையில் இருந்து ரணில் வெளியேற தீர்மானம்... கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளிடம் தனது எதிர்காலத் திட்டம் குறித்து அவர் விபரிப்பு...
7. கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை ஜீ எல் பீரிஸ் சந்திக்க ஏற்பாடு..
8. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க இன்னமும் தீர்மானம் இல்லை ..
9. நிதியமைச்சின் செயச்செயலாளராக சிரேஷ்ட திறைசேரி அதிகாரி ஆர்ட்டிகலவை நியமிக்க முடிவு...
10. ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நாளை முதல் நடத்த யூ என் பி முடிவு..
11. ரவி கருணாநாயக்கவுக்கு நிதியமைச்சை வழங்குவதா வெளிவிவகார அமைச்சை வழங்குவதா என்பதில் இழுபறி... நிதித்துறை நிறுவகங்களை இணைத்து புதிய அமைச்சு ஒன்றை வழங்க உத்தேசம்...
12. ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி எம் பிக்களிடம் இன்று கையொப்பங்கள் பெறப்படுகின்றன...
ராமசாமி சிவராஜா
Post a Comment