Header Ads



அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பாதுகாப்பு அமைச்சு செயலாளராக ஹேமசிறி நியமனம்


நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, 12 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், அந்த 12 அமைச்சுகளுக்குமான செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, தமது நியமனக் கடிதங்களை, இன்று (30) பெற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் கலந்துகொண்டார்.

இதில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, ஜனாதிபதி பணியாட்தொகுதியின் பிரதானியாகப் பதவி வகித்த ஹேமசிறி பெர்ணான்டோ நியமிக்கப்பட்டார்.

இப்பதவிக்கு கோத்தபய நியமிக்கப்படலாமென தகவல்கள் வெளியானமை இங்கு குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.