முஸ்லிம் அமைச்சர்கள் கொலைச் சதி - பூரண விசாரணை நடாத்துமாறு கோரிக்கை
முஸ்லிம் அரசியல் தலைமைகளைக் கொலை செது, தமிழ்த்தரப்பு மீது சுமத்தி, தமிழ் - முஸ்லிம் மோதல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு தமிழ் புலம்பெயர் அமைப்பு ஒன்று நிதி உதவியளித்ததாக ஊழல் மோசடி அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார மூலம் வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணை செய வேண்டும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும், பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எஸ்.எஸ். அமீர் அலியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமல் குமார கடந்த புதனன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பிரான்ஸில் வசிக்கும் துஷாரபிரிய என்பவர் தமக்கு பணம் அனுப்பி பணிப்புரைகளை வழங்கியதாக தெரிவித்திருந்தார்.
கிழக்கில் தமிழ், முஸ்லிம்களிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் அமைச்சர்களைக் கொலை செய்வது பள்ளிவாசல்களை உடைப்பது போன்றவற்றுக்காக கொரில்லா அணி ஒன்றை உருவாக்குமாறு தனக்கு பணிப்புரை வழங்கியதாக நாமல் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
நாமல் குமாரவின் வெளிப்படுத்துகை மிகப் பாரதூரமானது. கிழக்கில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இவற்றின் பின்னணியில் பலமான ஒரு சக்தி இருக்க வேண்டும். எனவே இது பற்றி அரசு உடன் விசாரணையை நடத்தி இதில் தொடர்புள்ளவர்களை வெளிப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களது பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் இன்பராசா தெரிவித்த விடயங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தான் ஏற்கனவே சட்டமும் ஒழுங்கும் அமைச்சரைக் கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கில் வளர்ந்துவரும் தமிழ், முஸ்லிம் உறவினைச் சீர்குலைக்கும் நோக்கில் சில சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இதற்காக பெரும் பணம் வழங்கப்படுகின்றது. இது குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்படுவதோடு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் வாக்குகள் சேகரிப்பதற்காக கட்டுக்கதைகள் கட்டுவதில் No.1
ReplyDelete