Header Ads



ஒரு நல்ல துடுப்பாட்ட வரிசையை, நாம் கண்டுபிடிக்க வேண்டும் - சங்கா

இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககாரா துடுப்பாட்ட வரிசை பலமாக்குவதுடன், அது ஒரு தீர்வான துடுப்பாட்ட வரிசையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

துபாயில் நடைபெற்று முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றிலே வெளியேறியது.

கத்து குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுடன் மோதி தோல்வியடைந்ததால், அந்தணி கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்தி வீரர் சங்ககாரா, நாம் சரியான நிலையில் தான் இருக்கிறோமா என்பதை முதலில் அறிய வேண்டும், இல்லையென்றால் நாம் அதை மாற்ற வேண்டும்.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் முடிவு மிகவும் முக்கியமானதாகும். 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரவுள்ளது.

அதனால் அதற்குள் நாம் சரியான ஒரு பேட்டிங் ஆர்டரை கண்டுபிடிக்க வேண்டும், துவக்க வீரர்களை சரியாக அடையாளம் காண வேண்டும், மூன்றாவது மற்றும் ஆறாவது இடங்களில் நிலையாக விளையாடக்கூடிய வீரர்கள் யார் என்பதை அறிய வேண்டும்.

ஆசியகோப்பை தொடரில் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்கள் இருந்தது.

ஒரு வீரரை நாம் முன்னர் அல்லது பின்னர் இறக்கும் போது அவரின் நம்பிக்கை குறையும், யார் எந்த இடத்தில் இறங்கினால் சிறப்பாக விளையாடுவார்கள் என்பது அறிய வேண்டியது மிகவும் முக்கியம், மூன்றாவது,நான்காவது மற்றும் ஐந்து, ஆறாவது வீரராக பேட்டிங் செய்ய வருபவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.

ஏனெனில் துவக்க வீரர்கள் சொதப்பிவிட்டால், அவர்கள் அணியை முன்னெடுத்து செல்ல வேண்டும். இதனால் ஒரு நல்ல துடுப்பாட்ட வரிசையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

1 comment:

  1. Coach கத்துருசிங்க-வை வீட்டுக்கு அனுப்பவேண்டும். ஏஞ்சலோ மத்தியூசை மீண்டும் அணி தலைவராக வேண்டும். அவுஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தை சேர்ந்தவர் ஒருவர் coach ஆக நியமிக்க வேண்டும்.

    இந்தியாவின் பேயரை கேட்டாலே பயந்துநடுங்கும் பாக்கிஸ்தானிலேயே கப்டன் உட்பட ஒருவரும் மாற்றப்படவில்லை. இலங்கையின் ஒரே ஒரு world class player ஏஞ்சலோவை நிறுத்தியது தவறு.

    ReplyDelete

Powered by Blogger.