Header Ads



நாலக்கவால் சிறைச்சாலையில் குழப்பம், அம்பியூலன் எதற்காக வந்தது..?

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா, வெலிக்கடைச் சிறைச்சாலையில் வை.ஓ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வேறு கைதிகள் இன்றி, அவர் மாத்திரம் அங்கு ​தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், உரிய நடைமுறைகளுக்கமைய, கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலேயே நாலக்க சில்வா தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் அவரது பாதுகாப்புக் கருதியே, வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை, நேற்று (25) இரவு, சிறைச்சாலைக்கு நாலக்க சில்வாவை அழைத்து வருவதற்கு முன்னரே, அவரைப் பரிசோதிப்பதற்காக, அம்பியூலன் வண்டி மூலம் வைத்தியரொருவர் சிறைச்சாலைக்கு வந்திருந்ததாகத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், அவரைப் பரிசோதித்த போது, அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கவில்லை என்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், நாலக்க சில்வாவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, அந்த வைத்தியர் பரிந்துரை செய்துள்ளார்.

இருப்பினும், அதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவ்விடத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவியுள்ளது.

No comments

Powered by Blogger.