Header Ads



வடக்கு - கிழக்கை இணைக்க வேண்டுமானால், என்னை கொல்ல வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால

“வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை. அதேபோல் சமஷ்டியும் இல்லை” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவற்றை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் முதலில் என்னை கொல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவது குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையடுத்து நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு அறிவித்துள்ளார்.

5 comments:

  1. நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கும் சகல மக்களும் மகிழ்ச்;சியாக வாழ்வதற்கும் வட-கிழக்கு இணைப்பும் மற்றும் சமஸ்டி ஆட்சியும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்ற விதத்தில் அரசு தனது உட்கட்டமைப்பு வசதிகளை செய்தாலே போதுமானது. அதற்காக சட்டங்கள் பெரிதாக இயற்றப்பட வேண்டிய அவசியம் அவசரம் இல்லை. பேச்சளவில் இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் வாழ்வதற்கு அரசியலாளர்கள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாகத் தம் அரசுப் பணிகளை கொண்டு சென்றாலே போதுமானது. முஸ்லிம்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லப்படுகின்ற ஆசாமிகள்தான் அதற்கு பெரும் காரணம். இதற்குப் பெரும் பெரும் சவால்கள் தேவையில்லை. மக்கள் பயமற்று வாழக்கூடியதான வாழ்க்கையினை மக்களுடன் சேர்ந்து அரசியலாளர்கள்தான்; ஏற்படுத்த வேண்டும். இலங்கையர் 9 இலட்சம் பேர் வெளிநாடுகள் பலவற்றில் வாழ்கின்றனர் இலங்கையில் ஏதோ ஒருவிதத்தில் பயங்கரவாதம் இருக்கின்றது என்ற பீடிகையே அதற்குக் காரணமாகும்.

    ReplyDelete
  2. An unprincipled unreliable character, very opportunistic. Good if such people be not in positions of making decisions for the people.

    ReplyDelete
  3. President

    Good speach
    keep it up

    ReplyDelete
  4. முற்றிலும் உண்மை.அடுத்து வடக்கு கிழக்கை இணைத்து சிறுபான்மையின் ஆதரவைப் பெற்று மீண்டும் பதவிக்கு வரும் மற்றொரு கீழ்த்தரமான நரித்தந்திரம் இந்த ஆசாமியிடம் இருப்பது போன்று இந்த பேச்சு காணப்படுகின்றது. ஒரு பித்தளைக்காசிக்கும் நம்பமுடியாத இந்த நாட்டு மக்களின் துரதிருஷ்டத்து வந்துசேர்ந்த ஆட்சியாளன்.

    ReplyDelete

Powered by Blogger.