Header Ads



எந்த விதத்திலாவது, ரணிலின் ஆட்சியை உடைக்க வேண்டும் - இதுவே நாட்டிற்கு தேவை

இடைக்கால அரசாங்கம் தற்காலிக அம்பலம் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளியிட்டிருந்த கருத்தை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியலில் இடைக்கால அம்பலங்கள் எதுவுமில்லை என பசில் ராஜபக்ச ஊடகம் ஒன்று வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். அவரது கருத்து சம்பந்தமாக அதே ஊடகம் விமல் வீரவங்சவிடம் வினவியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள வீரவங்ச,

தற்காலிக அம்பலங்கள் இல்லை. தவறான விடயங்களே சிலருக்கு தற்காலிகமான அம்பலங்களாக தெரிகின்றன. இடைக்கால அரசாங்கத்தை தற்காலிகமான அம்பலமாக கூற முடியாது.

முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக நியமிப்பது அம்பலமா?. அவரது கருத்துப்படி அமைச்சரவை ஒன்றை நியமித்து நாட்டை ஆட்சி செய்வது அம்பலமா?. அந்த ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்வது முட்டாள் தனமான வேலையா?.

நாட்டுக்கு ஏற்பட போகும் ஆபத்தை தடுப்பது தவறான செயலா?. நாட்டுக்கு நடக்க வேண்டிய அனைத்து அழிவுகளும் நடந்த பின்னர் நாட்டை பொறுப்பேற்பது அறிவுபூர்வமானதா?.

இதனால், நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது அம்பலமாக ஒருவருக்கு தெரிகிறது என்றால் இது தவறான சிந்தனை. தவறான பார்வை. அம்பலம் அல்ல. ஒவ்வொருவருக்கு வெவ்வேறு விதமாக தெரியலாம்.

எனினும் எந்த விதத்திலாவது ரணில் விக்ரமசிங்க ஆட்சி அதிகாரத்தை உடைக்க வேண்டும். இதற்கு எதிராக ஏதாவது தர்க்கங்களை உருவாக்க வேண்டும்.

நாட்டை காப்பாற்றவே இதனை செய்கிறோமே தவிர வேறு எதற்கும் அல்ல என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.