இலங்கையிலுள்ள அதிசயத்தின் புதிய, புகைப்படங்கள் வெளியாகியது (படங்கள்)
ஆசியாவின் அதிசயம் என கூறப்படும் தாமரைக் கோபுரத்தின் அமைப்பு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் தாமரைக் கோபுரத்தின் பல புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அத்துடன் பகல், இரவு மற்றும் மாலை வேலைகளில் புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ச்சியாக இலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க எதிர்பார்க்கப்படுதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு தாமரைக் கோபுரத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை முன்னெடுத்திருந்தது.
தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் உயரமான கட்டடமாக அது திகழும் என்பதுடன், 350 மீற்றர் உயரத்திற்கு அமைக்க முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும் தற்போது 356 மீற்றராக தாமரை கோபுரத்தின் உயரம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
Post a Comment