ஜனாதிபதி எனக்குக் கடமைப்பட்டுள்ளார் - சுஜீவ சேனசிங்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க நான் எவ்வளவோ செயற்பட்டுள்ளேன் எனவும் இதற்காக அவர் எனக்குக் கடமைப்பட்டுள்ளார் எனவும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
தனக்கு எதிராக ஊழல் மோசடி பற்றிய குற்றச்சாட்டு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகவே முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு பொய்யான ஒன்று. இதற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை.
வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவரிடம் நிதி கோரியதாக அந்தக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்க முன்னர் ஜனாதிபதி என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பிரதமரும், ஜனாதிபதியும் பொறுப்புக் கூற வேண்டும். இவ்வாறு நடைபெறும் போது அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதா? இல்லையா? என்ற தீர்மானத்துக்கு வர வேண்டிய ஒரு நிலையில் தான் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Prove your innocence in the courts and now stop bluffing.
ReplyDeleteyes this is 100% true.He has sent his agent to Italy to demand 25 euro commission for a project to be started in Srilanka.As result this project is delayed for more than three years as the particular company refused to pay this money.
ReplyDeleteI regret that I failed to mentioned that 25 million Euro demanded by this man from Italian company.
ReplyDelete