நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாத, தொண்டராசிரியர்களையும் அழைக்க நடவடிக்கை –இம்ரான் எம்.பி
மாகாணசபை மூலம் தெரிவுசெய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாத தொண்டராசிரியர்களையும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாத தொண்டராசிரியர்களுடன் செவ்வாய்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக தொண்டராசிரியகளின் விபரங்களை எமக்கு சமர்பிக்கும்படி கிழக்கு மாகாண கல்வியமைச்சை நாம் கேட்டு கொண்டதுக்கு அமைவாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் எமக்கு அனுப்பபட்ட பெயர் பட்டியலில் உள்ளவர்களே நேமுகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் எமக்கு அனுப்பப்பட்ட பெயர் பட்டியல் அவர்களால் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டதாக வெளியான பெயர் பட்டியல் அல்ல என இன்றைய கலந்துரையாடல் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இதனால் புதிய பெயர் பட்டியலை அனுப்பும்படி கிழக்குமாகாண கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளோம்.
மேலும் கிழக்கு மாகாண சபையால் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நேர்முகத்தேவுக்கு கடிதம் கிடைக்காதவர்களையும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
அத்துடன் தகுதியுள்ள யாருக்கும் அநீதி இழைக்கா வண்ணம் 445 தொண்டராசிரியர்களுக்கு மேலதிகமாக தொண்டராசிரியர்களை இனைத்துக்கொள்ள அமைச்சரவையின் அனுமதியை பெற்று இரண்டாம் கட்ட நியமனத்தையும் வழங்கவுள்ளோம் என தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு.
Post a Comment