Header Ads



காதில் ஹெட்போனுடன், செல்பி அடித்துக்கொண்டுவந்த அப்சால் வபாத் - பம்பலப்பிடடியில் சோகம்

காதில் ஹெட்போன் செருகியபடி.. செல்பி அடித்துக்கொண்டு முன்னோக்கி வந்தார்... ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்த அப்சால் அஹமட் தொடர்பில் சாரதியின் வாக்குமூலம்.

இளைஞன் ஒருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் வீதியில் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பங்களாதேஷ் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும்   25 வயதான அப்சால் அஹமட் பாகிஸ்தான் நாட்டவர்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காதில் இயர்போன் மாடிக்கொண்டு, ரயில் வீதியில் செல்பி எடுக்க முயற்சித்த போது இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மாணவனின் பிரேத பரிசோதனை நேற்று கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மருதானையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

"நான் மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி ரயிலை ஒட்டி சென்று கொண்டிருந்தேன். மாலை சுமார் 6.55 அளவில் இளைஞன் ஒருவன் தண்டவாளத்தில்  செல்பி அடித்தபடி நடந்து கொண்டிருந்தான். நான் பல தடவை ஹோர்ன் ஒலியை எழுப்பினேன். ஆனால் அந்த இளைஞன் விலகவில்லை. காதில் இயர்போன் செருகி இருந்தார். இறுதியில் ரயிலில்  மோதுண்டு அடியில் சென்றார். நான்  அந்த  இளைஞனின் உடலை  பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அளுத்கம நோக்கி சென்றேன்" இவ்வாறு ரயில் சாரதி தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இளைஞனின் மூளை பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.