Header Ads



பதவியிலிருந்து விலகத் தயார் - மஹிந்த

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் இந்த தகவலை வெளியிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் பதவியை உறுதி செய்து கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

120 என்ற பெரும்பான்மை தன்னிடம் உள்ளதாகவும், சிக்கல் இல்லாத அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் எனவும் வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அதன் காரணமாகவே தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது ஆதரவை கூட ஜனாதிபதியால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் பசில் ராஜபக்ச தரப்பு நேற்றைய தினம் அமைச்சு பதவி பெற்றுக் கெள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளது.

துமிந்த திஸாநாயக்க உட்பட சிலர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமையை, எந்தவொரு நாடும் இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜனாதிபதியின் ஜனநாயகமற்ற செயல் குறித்து சர்வதேச நாடுகளில் விமர்சனம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சர்வதேச நாடுகள் பல தங்கள் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு கோரிக்கை 126 உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட கடிதம் நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இதில் 6 உறுப்பினர்கள் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் ஆகும்.

நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டென தெரியவந்துள்ளது. இதன்மூலம் இலகுவாக பெரும்பான்மை பலத்தை அவர் நிரூபிப்பானர் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

  1. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நரிக்கு விளங்குகின்றது. அந்தப்பழம் புளிக்கும். சீ.சீ. அந்தப்பழம் புளிக்கும் எனக்கு வேண்டாம். நரியின் சரியான தீர்மானம்ஂ!

    ReplyDelete
  2. சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டுமென மைத்ரீ நம்பினால் போதும், நாளைக்கே பாராளுமன்றத்தை கூட்டுவான் !!

    ReplyDelete

Powered by Blogger.