Header Ads



உயிரைத் தியாகம் செய்யத் தயார் - ஒவ்வொரு சொட்டு இரத்தத்தையும் மக்களுக்காக சிந்த விரும்புகின்றேன் - சஜித்

ஜனநாயகத்திற்காக மரணத்தை தழுவுவதற்கு தயார் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“எனது தந்தை 1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் வர்க்கத்திற்காக உயிரைத் தியாகம் செய்தார்.

நான் இன்று உயிரைத் தியாகம் செய்யும் நோக்கிலேயே வந்திருக்கின்றேன். குண்டு அடிபடவும், துப்பாக்கிச் சூட்டை தாங்கவும் தயார். ஜனநாயகத்திற்காக எனது உயிரைத் தியாகம் செய்யத் தயார்.

என்னுடைய ஒவ்வொரு சொட்டு இரத்தத்தையும் மக்களுக்காக சிந்தவே விரும்புகின்றேன். நான் அழிந்து போனாலும் சாமான்ய மக்களுக்காக போராடுவதனை நிறுத்த மாட்டேன்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.