இந்த அரசாங்கம், வெட்கம் இல்லாதது - அமைச்சர் ராஜித ஆத்திரம்
தமது அரசாங்கம் ஓர் வெட்கம் கெட்ட அரசாங்கம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தெலைக்காட்சி சேவையொன்றில் நேற்று வெளியான காணொளியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் கூறுகையில்,
பிரகீத் எக்னலிகொட பத்திரிகைகளில் எழுதாமல் இருந்திருந்தால் இன்று அவர் உயிருடன் இருந்திருப்பார்.
அவரது மனைவி, எக்னலிகொடவின் புகைப்படத்தை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு நாடு முழுவதும் செல்கின்றார், நீதிமன்றம் தோறும் செல்கின்றார்.
அவர்களை விற்று வாக்கு பெற்றுக் கொண்ட நாம், அவற்றை கண்டும் காணாதது போல் இருக்கின்றோம். தற்பொழுது இந்த விடயங்கள் யாருக்கும் தெரிவதில்லை.
தங்களது அரசாங்கத்தை நிறுவிய எக்னலிகொடவின் மனைவி மற்றும் பிள்ளைகள் இன்று வீதியில் நிற்கின்றார்கள்.
இவ்வாறான விடயங்கள் குறித்து இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு வெட்கம் கிடையாது, இதுவே நிதர்சனம்.
ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இன்று படைவீரர்களாக அர்த்தப்படுத்தப்படுகின்றனர்.
படைவீரர்கள் கொலையாளியாக மாற முடியாது, கொலையாளி படைவீரனாக இருக்க முடியாது என இராணுவத் தளபதி கூறுகின்றார்.
எந்தப் படைவீரன் என்றாலும் கொலை செய்ய உரிமையில்லை என போருக்கு தலைமை தாங்கிய பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா கூறுகின்றார்.
மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் படைவீரர்கள் என்றால், படைவீரன் என்பவன் யார் அதுக்கு வேறு ஓர் பெயரைச் சொல்ல வேண்டும்.
நாம் இவ்வாறானவர்களை அழைப்பதற்கு வெட்கமின்றி வேறும் ஓர் பெயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
கீத் நொயார் கூரையில் கட்டித் தொங்கவிட்டு தாக்கப்பட்டார் சாகும் தருவாயில் அவர் மீட்கப்பட்டார்.
அந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜயசூரிய தொலைபேசியில் தொடர்பு கொண்டு நொயாரை காப்பாற்றினார்.
இன்னும் சில நிமிடங்கள் முடிந்திருந்தால் நொயார் உயிரிழந்திருப்பார் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment