பாராளுமன்றம் கூடினாலும், மகிந்தவை பிரதமர் பதவி நீக்கமுடியாது - அரசாங்கப் பேச்சாளர் அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும் என அரசாங்கத்தின் இணை ஊடகப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அரச தகவல் திணைக்களத்தில் இன்று -30- நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படும்.
நாடாளுமன்ற கூட்ட தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என்பதுடன் சட்டமூலங்களோ வேறு நடக்காது என்பதுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக நடவடிக்கைகளும் இடம்பெறாது எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பிரதமரை நீக்க முடியாது எனவும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு அல்லது வரவு செலவுத்திட்டம் அல்லது நிதி சட்டமூலம் ஒன்றை தோற்கடித்து பிரதமரை நீக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
2
இடைக்கால வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றை கலைக்க வேண்டும் என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கத்தினால் எதிர்வரும் 16ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஏதேனும் ஓர் காரணத்தினால் தோற்கடிக்கப்பட்டால், அந்த தருணத்திலேயே நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிகாரம் உண்டு.
அரசியல் அமைப்பில் இதற்கான அதிகாரம் உண்டு. நாடாளுமன்றை கலைக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் நோக்கமாகும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இரண்டு மாத கால இடைவெளியில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment