ஜமால் கொலை அருவருக்கத்தக்கது, இது கடினமான காலம் என்றும் தெரியும் - சவுதி அமைச்சர்
சவுதி அரேபியா மிகவும் நெருக்கடியில் உள்ளது. ஜமால் கசோகி கொலை மிகவும் அவருக்கத்தக்கது என சவுதி அரேபியா ஆயில்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சவூதி அரேபிய மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அடேல் அல் ஜூபெயிர் கூறும்பொழுது, ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிக பெரிய தவறு.
அவர் மரணத்துக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தான் உத்தரவிட்டார் என்பதை நான் மறுக்கிறேன் என கூறினார்.
இந்நிலையில் சவுதி அரேபியா மிகவும் நெருக்கடியில் உள்ளது. ஜமால் கசோகி கொலை மிகவும் அவருக்கத்தக்கது என சவுதி அரேபியா ஆயில்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது மிகவும் கடினமான காலம் என்று எங்களுக்கு தெரியும். பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் உலக அரங்களில் பெரும் கோபத்தை எதிர்க்கொண்டுள்ளது என கூறியுள்ள ஆயில்துறை அமைச்சர் காலித் அல்-பாலிக், பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை மிகவும் அவருக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் அரசியல் ஆயுதமாக ஆயில் உற்பத்தியை பயன்படுத்தும் எண்ணம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உங்களைப்போல அருவருக்கத்தக்க கூட்டம் சவூதியில் இருக்கும் வரை இவ்வாறான அருவருக்கத்தக்க சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்.
ReplyDelete