Header Ads



"இந்தக் குழந்தை, விமான விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதல்ல..."


இந்தோனேசிய விமானமொன்று கடந்த திங்கட்கிழமை  திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். 

விபத்திற்குள்ளான விமானத்தில் இருந்து ஒரு குழந்தை மாத்திரம் தப்பி உயிர் பிழைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பலராலும் பகிரப்பட்ட நிலையில் தற்போது அது தவறான புகைப்படம் என நிரூபணம் ஆகியுள்ளது.

விபத்துக்குள்ளாகி பல மணி நேரங்களிற்கு பின் சமூக  ஊடகங்களில் ஆயிரக்கணக்கான முறை ஒரு வயது குழந்தையின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. 

'பயணம் செய்த 189 பேரில் இந்த குழந்தை மாத்திரம் உயிர் பிழைத்துள்ளது. "காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி' என்றே இத்  தவறான புகைப்படம் பகிரப்பட்டது.

இது தொடர்பாக இந்தோனேசிய  ஊடகங்களில் இக்குழந்தையின் உண்மையான தகவல் அடங்கிய புகைப்படம் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன நிலையில் இக்குழந்தை கடந்த ஜூலை 3 ஆம் திகதி இந்தோனேசியாவின் சேலயர் தீவில் கடலில் மூழ்கிய படகில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை என்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.