Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியும், முஸ்லிம்களின் புரிதலும்

ஒரு நாட்டின் தலைவர் ஏனைய மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறானவர்களையே மக்கள் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும். நாட்டில் இடம்பெற்ற சகல பிரச்சினைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவராக இருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னரும் இன வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றமையானது வேதனைக்குரிய விடயமாகும்.

தலைமைப்பதவியில் பல்லாண்டு காலம் தோல்வியைத் தழுவிய இவர் நாட்டின் தலைவராக இருப்பது நகைப்புக்கிடமாக இருக்கிறது. மக்கள் செல்வாக்கு இல்லாமல் ஒரு நாட்டின் தலைவராக இருப்பது வேடிக்கையான விடயமாகும்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அவரது தோ்தல் தொகுதியான பியகமமையில் படுதோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தனி பெரும்பான்மை சமூகம் வாழும் பகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி தேல்வியை தழுவிக்கொண்டதால் கட்சித் தலைமையை மாற்றக்கோரி கட்சி அங்கத்தவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஒட்டு மொத்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மட்டுமே கட்சி பெறுவாரிய வாக்குகளைப் பெற்று ஒரளவு வெற்றியை பெற்றுள்ளது.

எமது மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனை இனவாதமாக பார்க்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் நாங்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாக தொழில் புரிந்து வருகின்றோம். அங்கு நல்ல பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிங்கள நண்பர்கள் ஆறுதல் கூறும் போது ஒரு நாட்டை நிர்வகிக்கும் முஸ்லிம்கள் மூலமாக நாட்டின் பிரதமர் பதவியை வகித்துவரும் ரணில் போன்ற கோமாலிகள் இருக்கும் வரை இந்நாட்டு முஸ்லிம்களுக்கு என்றும் விடிவு ஏற்படப் போவதில்லை.

எமது நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியானது பல்வேறு தலைவர்களை உருவாக்கிய பழமை வாய்ந்த கட்சியாக இருந்து வருகிறது. டி.எஸ்.சேனநாயக்க முதல் ஆர். பிரேமதாஸ வரை பல்வேறு தலைவர்கள் இக்கட்சியின் தலைவராக இருந்தாலும் இன்றைய தலைவரின் நிலை எல்லோரும் அறிந்த விடயமாகும்.

ரணில் விக்ரமசிங்க தலைமையேற்றதன் பின்னர் இந்தக் கட்சி இழந்து வரும் செல்வாக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல என வர்ணிக்கும் அளவுக்கு இக்கட்சியானது மக்கள் செல்வாக்கை தொடர்ச்சியாக இழந்து வருகின்றது. ஆனால் எல்லாக்காலங்களிலும் சிறுபான்மை மக்களால் தேர்தலில் ஓரளவு வெற்றி பெறும் இக்கட்சியானது சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது பிரச்சினை வரும் போது வாய் திறக்காமல் மௌனப் போக்கை கடைப்பிடிப்பது கவலைக்குரிய விடயமாக இருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை மக்கள் அனுபவித்த கஷ்ட நஷ்டங்கள் ஏராளம். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மீறா ஜும்மா பள்ளி, ஹுசைனியா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 103 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதும் அதே ஆண்டு ஒக்டேம்பர் மாதம் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டதும் இதே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலாகும். அது மட்டுமா? அழிஞ்சிப்பொத்தனையில் ஹஜ்ஜாஜிகள் (விடுதலைப் புலிகளால்) கொலை செய்யப்பட்டார்கள்.

குணசிங்க புற பிரதேசத்தில் அதிகளவு முஸ்லிம்கள் வாழ்ந்த போதும் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவினால் முஸ்லிம்கள் துரத்தப்பட்டு சிங்களவர்கள் அதிகளவில் குடியமர்த்தப்பட்டதும் இதே ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியிலாகும்.

அனுராதபுரம் பழைய நகரில் அதிகளவு முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வியாபாரத்தில் விழ்சியை ஏற்படுத்துவதற்காக வேண்டி அனுராதபுர புதிய நகரம் பெருளாதார டவுனாக மாற்றப்பட்டது. கதுருவெல பிரதான நகரினை பொலண்னறுவ டவுனுக்கு கொண்டுவரப்பட்டது வவுனியா நகரினை புதிய டவனுக்கு இடம்மாற்றியதும் இதே ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியிலாகும். அது மட்டுமா? 2002 ம் ஆண்டு முதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போதும் ரணில் அவர்கள் தான் பிரதமராக இருந்தார். மற்றும் 83 தமிழ் சிங்கள இனக்கலவரம் இதே ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து அடக்கு முறைகளுக்கு எதிராக எந்த காத்திரமான நடவடிக்கைளும் ஐக்கிய தேசிய கட்சினால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக 1994 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய முன்னாள் ஜனாதிபதியினாலே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகம் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இன்றுவரை இச்சம்பவங்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக வேண்டி எவ்விதத்திலும் ஜனாதிபதி ஆணைக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

முஸ்லிம்களின் பிரதானமான வர்த்தகத் துறையாக இருந்த ஆபரண விற்பனையை முடக்கும் நோக்கில் இரத்தினக்கல் அதிகாரசபையை ஆரம்பித்ததும் இதே ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியிலாகும்.

2015ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு பிரதான சமூகமாக இருந்த முஸ்லிம்கள் நல்லாட்சியை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பை வழங்கினர். 99வீதமான முஸ்லிம்கள் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு தங்களது வாக்குகளை பிரயோகித்தன.

ஆனால் இன்றுவரை முஸ்லிம்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களின் பரம விரோதியான இஸ்ரேல் என்ற யூத நசரானிகளின் வலையில் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதித்திட்டத்தை அரங்கேற்றி வருவது கவலையாக உள்ளது. இஸ்ரேலின் மத மிசனெறியை இலங்கையில் நிறுவி அதற்கான அங்கீகாரத்தை இந்த ரணில் அரசாங்கம் உருவாக்கியது ஏன் என்பதை முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க வேண்டும்.

அன்று இஸ்ரேல் மிசனெறியை உருவாக்க முன் நின்ற தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இன்று அடிப்படைவாத முஸ்லிம்களே நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியிருப்பது இஸ்ரேலின் பணப்பலத்துக்கு அடிமையாகிவிட்டாரா என்ற கேள்வி எழுகின்றது. இந்த இராஜாங்க அமைச்சர்தான் இஸ்ரேலின் தூதரகத்தை திறப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் வாக்குகளால் பாராளுமன்றம் பிரவேசித்த இவர்கள் இன்று இனவிரிசலை ஏற்படுத்த காரணமாக இருக்கிறார்கள் இவர்களே என்பது யாரும் அறியாத உண்மையாக இருக்கிறது. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூற்றிக் அரசியல் நடத்தும் அளவுக்கு வங்குரோத்து அடைந்துள்ளது ஐக்கிய தேசியக்கட்சி.

திகன சம்பவத்தில் சொத்து பொருள் சேதங்களை ஏற்படுத்தியது மாத்திரமன்றி மத வழிபாட்டுத் தலங்கள் வீடு வாசல்கள் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தாலும் இதன் மூலம் எத்தனை பேர் நன்மை அடைவார்கள் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹங்வெல்ல ஆயுதக் களஞ்சியம் வெடித்த போது அருகில் இருந்த மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்குவதாக கூறிய போதும் இன்றுவரை அந்த மக்களுக்கு எவ்வித சலுகையும் நிவாரணமும் வழங்காத ரணிலின் அரசாங்கம் திகன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக நிவாரணத்தை எப்போது வழங்கப் போகிறது.

நிவாரணத்தை வழங்கி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் மரணமடைந்த பாஸித் போன்றோரின் உயிரை மீள பெறமுடியாது என்பதே மறுக்க முடியாத நிதர்சனமாகும்.

– அமீன் எம் றிலான் –

1 comment:

  1. அமீன் றிலான் சொன்னது அவ்வளவும் எவ்விதத்திலும் மறுக்க முடியாத உண்மைங்க. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கொஞ்சம் பாடம் புகட்ட விரும்பினான். நடந்தவை அதன்பொருட்டே நடந்தன. ரணிலின் துள்ளல்கள் மாத்திரமல்ல பெரியவர் மஹிந்தவின் ஆட்டங்களும் சகிக்க முடியாதனவாகவே இருந்தன. மஹிந்தவின் காலத்தில்தான் மிக அதிகமான பள்ளிகள் நொறுக்கப்பட்டன. இந்தக் காலத்தில்தான் தினகரன் வீரகேசரி தினக்குரல் போன்ற பத்திரிகைகள் பெருவாரியாக முஸ்லிம் பிரதேசங்களில் விற்கப்பட்டன. கோத்தா சேரும் நல்ல முறையில் எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றியவண்ணமே இருந்தார். இரண்டும் ஒன்னுதாங்க. வர்ர தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்க முன் இந்த ரெண்டு கட்சிலயும் யார் 1947 லிருந்து முஸ்லீம்களுக்கு கொஞ்சம் குறைய அநியாயம் செய்தார்களோ அவங்களுக்கு வாக்களிங்க. அப்பிடி இப்பிடி நாங்க கணக்கு பார்த்து வாக்களிச்சா இவங்களும் மாறி மாறி வந்து எங்கட தலையில் மொளகாய் அரைப்பாங்க. முஸ்லிம்களது தலை என்னிக்கும் அவங்களுக்கு அம்மியாத்தான் இருக்கனும். அப்பதான் எங்கட அரசியல்வாதிகளும் பொழைச்சுக் கொள்வாங்க. முஸ்லீம் கட்சிலயும் யார் கொஞ்சம் பிச்சைக்காரப் பணக்காரரோ அவங்களுக்கு வாக்களிங்க. பாவமுங்க. கொஞ்சம் சமன் ஆகட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.