இஸ்ரேல் மீதான அங்கீகாரத்தை, கைவிட பலஸ்தீனம் தீர்மானம்
அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீன உச்ச அமைப்பான, பலஸ்தீன விடுதலை அமைப்பு (பீ.எல்.ஓ) இஸ்ரேலை அங்கீகரிப்பதை இடைநிறுத்தி இருப்பதோடு அதனுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் நிறுத்தியுள்ளது.
கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட 1967 எல்லைகளுடனான பலஸ்தீன நாடு ஒன்றை இஸ்ரேல் அங்கீகரிக்கும் வரை இந்த இடைநிறுத்தங்கள் நீடிக்கும் என்று பீ.எல்.ஓவின் நிர்வாக அமைப்புகளில் ஒன்றான பலஸ்தீன மத்திய கெளன்சில் குறிப்பிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இரண்டு நாள் சந்திப்பை நடத்திய இந்த கெளன்சில், 1994 பாரிஸ் பொருளாதார நெறிமுறை நிறுவப்பட்ட இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உடன்படிக்கையும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒஸ்லோ உடன்படிக்கையின் செல்லுபடித் தன்மையையும் அகற்ற அது முடிவு செய்துள்ளது.
“இஸ்ரேல் கைச்சாத்தான உடன்படிக்கையை நிராகரித்து வரும் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று அந்த கெளன்ஸில் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment