வெளிநாடுகள் கோருவதன்படி, நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது – கோத்தா
உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
“இந்த அரசாங்கத்தில் நான் எந்தப் பதவியையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. தற்போதைய அமைச்சர்கள், மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டிய தேவை உள்ளது.
அதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுத்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு முகம் கொடுக்கும் பல்வேறு முயற்சிகளை சிறிலங்கா எதிர்கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் பொதுவாக அதனைக் கவனிக்கவில்லை.
எமது அரசியலமைப்புக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். வெளிநாட்டவர்கள் கேட்கிறார்கள் என்பதற்கான நாங்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது.
ரணில் விரும்பினால் அலரி மாளிகையில் தங்கியிருக்கலாம். அவர் பிரதமராக பாசாங்கு செய்கிறார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவன் செய்த குற்றங்களுக்கு இவனைச் சிறைப்படுத்தியிருந்தால் பெரும்பாலான பிரச்னைகள் இன்று தீர்க்கப்பட்டிருக்கும். மைதிரிக்கு குசினியின் பின்கதவால் ஓடும் காலம் மிக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
ReplyDelete