Header Ads



வடக்கு முஸ்லீம்களின் நிலைமைகள் - அரச அதிபர் மூலமாக ஜனாதிபதி, பிரதமர் மனு கையளிப்பு

வடக்கிலிருந்து பலவந்தமாக ஆயூத முனையில் முஸ்லீம்களை வெளியேற்றி 28 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், தொடரும் சமகால சவால்களும் பிரச்சினைகளும் முன்வைப்புக்ளை புத்தள மாவட்ட அரச அதிபரூடாக ஜனாதிபதி ,  பிரதமர், வடமாகாண ஆளுநர் புத்தள மாவட்ட அதிபருக்கும் மனுகையளிக்கப்பட்டது.வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லீம்களின் நிலைமைகள் தொடர்பாக அரச அதிபர் கலந்துரையாடலில் யாதார்த்த நிலை கூறப்பட்டது.  

காத்திரமான மீள்குடியேற்றங்கள் செய்யப்படவில்லையாயின், அதற்கா காரணங்களை உரியவாறு தெரியப்படுத்தினால் அதற்கான தீர்வுக்காக தன்னால் ஆன உதவிகளை செய்வதாகவும் கூறினார் 

இன்று -30- புத்தள மாவட்ட செயலகத்தில் இது நடைபெற்றது.

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளிறேற்றப்பட்ட சிவில் சமூக அமைப்பு தலைவர் மலிக்மௌலவி , செயலாளர் ஹஸன் பைறூஸ்,  பதுருதீன் நிலாம் ஆகியோர் மேற்படி மனுக்களை கையளித்தனர். 

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்ட்ட சிவில் சம்மேளனம் 

No comments

Powered by Blogger.