Header Ads



அமைச்சரவையில் மாற்றம் வருகிறது

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி பிரமாணம் செய்துள்ளமை நாட்டில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

மஹிந்தவின் பதவியேற்பு தொடர்பான தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளியானதும், கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னாள் பாரிய மக்கள் கூட்டம் ஏற்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பலரும் அந்த இடத்தில் குவிந்துள்ளனர்.

பரபரப்பான சூழ்நிலையில் நாளைய தினம் அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.