முஸ்லிம்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் காத்திருக்கும் ஆபத்து
-எஸ்.என்.எம்.ஸுஹைல்-
இலங்கை முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் பெரும் ஆபத்தொன்று காத்திருக்கிறது. ஜனாதிபதி விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக அவரின் வார்த்தைகள் சாட்சியாக அமைந்திருக்கிறது. கடந்த திங்களன்று ஹம்பாந்தோட்டையிலும் செவ்வாயன்று கொழும்பிலும் உடனடியாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதிக்கு புதிய முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே திட்டம். அந்த புதிய தேர்தல் முறை தாமரை மொட்டு மஹிந்த அணிக்கும் சாதகமானதாகும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு கூட்டணி, ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கிற்கு வெளியே ஆபத்தானதாகவே அமையும்.
மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாராளுமன்றில் கடும் எதிர்ப்பு வெளியானது. அதனால் மீளாய்வுக்குழு அமைக்கப்பட்டு அப்போதைய பிரதமர் தலைமையில் ஐவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதில் திருத்தம் ஏற்படுத்த அனுப்பப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு சாதகமில்லாத அந்த சட்டத்தை இழுத்தடிக்கவே முயற்சித்தார். எனினும் இன்று மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த சட்ட மூலம் சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் சாதகமாக இருப்பதனால் அதை மீண்டும் பாராளுமன்றுக்கு அனுப்பாது, சட்டம் இயற்ற ஜனாதிபதிக்கு அனுப்ப வாய்ப்பே இருக்கிறது. இது முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் சிறு கட்சிகளுக்கும் பெரும் ஆபத்தானதாக அமையும்.
சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவும், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தெரிவான மைத்திரிபால சிறிசேன இப்படியொரு துரோகத்தனத்திற்கு திட்டமிட்டுதான் காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறாரா? என்கிற சந்தேகம் எழ ஆரம்பித்திருக்கிறது. மைத்திரி அப்படி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தற்போது அவரின் நடவடிக்கைகள் அப்படித்தான் அமைந்திருக்கிறது.
எனவே, இவ்விடயம் குறித்து அவசரமாக முஸ்லிம், தமிழ் அரசியல் தலைமைகள், சட்ட வல்லுனர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் விரைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கடந்த காலங்களில் இந்த மாகாண எல்லை நிர்ணய விடயம் மற்றும் தேர்தல் முறை விடயத்தில் பேராசிரியர் ஹஸ்புல்லா தனி மனிதனாக நின்று போராடினார். அவர் இன்று நம் மத்தியில் இல்லை. அவர் விட்டுச் சென்ற பணியை நாம் தொடர முன்வர வேண்டும்.
Better ask advise from Athaullah, Hisbullah, Kadhar masthan, Paisar musthafa, Mubarak moulavi, Thondaman, V.Suresh, and Co-all dramatic persons in North.....
ReplyDeleteஎப்படியோ.... புதிய தேர்தல் முறைதான் ஜனநாயமானது, சகல இன மக்களுக்கும் நியாயமானது.
ReplyDeleteவட-கிழக்கில் மட்டுமே TNA போட்டியிடுவார்கள். எனவே தென்னிலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களின் வாக்குகளும் மலையகத்தை சேர்ந்த தலைவர்களுக்கே கிடைக்கும். முக்கியமாக மனோ கணேசனின் வேட்பாளர்களுக்கு. எனவே உங்களின் சொந்த பிரச்சணைகளுக்குள் தமிழர்களை இழுக்காதீர்கள்.
அநதோனி ராஜின் புத்திமதியை மிக்க கவனமாக சொவியுற்று இனியாவது முஸ்லீம்கள் மத்த சமூகத்தின் நலனைப்பாராமல் தனது சமூக நலநில் மாத்திரம் அக்கரையாக இருக்குமாறு தயவாய் வேண்டிநிற்கிநோம்
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத் தேர்தல்கள் தொடர்பாக கூட்டமைப்பின் தலைமை தனிச்சையாகத் தாம் விரும்பிபடிக்கு மேல்மட்ட முடிவுகளை எடுப்பது சாத்தியமில்லை. இது சென்ற மாகாணசபை முதல்வர் பதவியை சுழற்சி நிபந்தனைகளற்று விட்டுக்கொடுத்தமை தொடர்பான பனிப்போராகும். கிழக்கில் முஸ்லிம்கள் பற்றிய தமிழ் தலைமைகளதும் தமிழர்பற்றிய முஸ்லிம் தலைமைகளதும் பயங்களே தேர்தல் உத்திகளாக வளர்த்தெடுக்கப் படுகிறது. இதனைச் சொல்லியே கூட்டமைப்பையும் கருணாவையும் பிள்ளையானையும் ஓரணியில் கொண்டுவரும் முயற்ச்சிகமுடுக்கிவிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைமைக்கும் கிழக்கு பிரிவுக்குமிடையிலான பனிப்போர் நடக்கிறது. இதற்க்கு சென்ற மாகாணசபை முதல் அமைச்சர் பதவி சுழற்ச்சி முறைமையின்றி விட்டுகொடுத்தமையே முக்கிய காரணமென தெரிகிறது. பதவிகள் தொடர்பாக வலுவான சுழற்ச்சிமுறை உருவாக்கப்படாமல் கிழக்கில் தமிழ் முஸ்லிம் இளைஞர்களிடையே தேர்தல் முறைமைகள் சார்ந்த ஒருமைப்பாட்டுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ReplyDeleteAjan anthony இந்த புதிய முறையிலும் முஸ்லிம்களுக்கு சாதகம் உண்டு அதனால் வெற்றிகிடைக்க முதல் பிரபாகரனை போல் அதிகமாக கற்பனைகொள்ளாதே. இம்முறை வன்னியில் பல உள்ளூராட்சிமன்றங்கள் முஸ்லிம்களின் கைகளுக்கு சென்றதை நியாபகப்படுத்திகொள். மற்றபடி நுவரெலியா மாவட்டத்தை தவிர்த்து மனோ கணேசனாலோ வேறு எந்த கணேஷனாலோ தென்னிலங்கையில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தையும் பெற முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்
ReplyDelete@info x,
ReplyDeleteமாகாண சபை தேர்தல் வேறு உள்ளுராட்சி சபை தேர்தல் வேறு. உதாரணமாக வட மாகாணத்தில் 36 தொகுதிகள் உள்ளன என்றால் அங்கு ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவொரு ஆசனம் உள்ளது. எந்த கட்சி கூடிய வாக்கை பெருகின்றதோ அந்த கட்சிக்கு தான் அந்த தொகுதிக்கான ஆசனம். இறுதியில் தான் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தீர்மானிக்கப்படும். உள்ளுராட்சியில் அவ்வாறல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் ஒன்று சேர்ந்து அவர்களை விட அதிக வட்டாரங்களில் வென்றால் இறுதியில் த தே கூ க்கு எதிராக சகல கட்சிகளும் சேர்ந்து ஆட்சியை பிடிக்கும். மாகாண சபையில் இது சரிவராது ஏனெனில் ஒரு தொகுதியில் ஒரு கட்சி மாத்திரம் தான் ஆசனத்தை பெறலாம். எனவே முசலி,வவுனியா தெற்கு சிங்கள பிரிவு மற்றும் மணலாறு என்ற மூன்று தொகுதிகளையும் தவிர மீதி சகல தொகுதிகளிலும் தமிழர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் பெரும்பாண்மை கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி மற்றும் சுதந்திரகட்சியில் இருந்து தமிழர்கள் தான் வருவார்கள். போன உள்ளுராட்சியிலும் உதாரணமாக மாந்தை கிழக்கு மற்றும் மாந்தை மேற்கு போன்ற தொகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து வந்த ரிஷாட் வென்றிருந்தார். ஆனால் அங்கே ஒரு முஸ்லீம் உறுப்பினரும் தெரிவு செய்யப்படவில்லை. எனவே இந்த புதிய மாகாண சபை திருத்தும் மூலம் முஸ்லிம்கள் வட மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரே ஒரு தொகுதியான முசலியையும் இழப்பார்கள்.