Header Ads



'றோ' என்று ஜனாதிபதி கூறவேயில்லை – சிறிரால் லக்திலக

அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் எந்த இடத்திலும், ‘றோ’ என்ற பதத்தைப் பாவிக்கவேயில்லை, என்றும், இந்தியப் புலனாய்வு  சேவை என்றே குறிப்பிட்டார் எனவும், சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

தன்னைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்துக்குப் பின்னர் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருந்தது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகின.

ஊடகங்களில் வெளியான இந்தச் செய்திகள் தொடர்பாக விளக்கமளித்துள்ள, சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக,

”சிறிலங்கா அதிபர் இந்தியப் புலனாய்வுச் சேவை என்று மாத்திரமே குறிப்பிட்டாரே தவிர, ‘றோ’ என்று கூறவில்லை.

தலைவர்களைக் கெலை செய்யும் இரகசிய புலனாய்வு அமைப்புகளின் முயற்சிகள் தொடர்பாக,  சிறிலங்கா அதிபர் பொதுப்படையாகவே பேசினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த நகர்வுகளை அறிந்திருக்கவில்லை என்றும் சிறிலங்கா அதிபர் உறுதியாக கூறியிருந்தார்.

அத்துடன், எந்த இடத்திலும் ‘றோ’ என்றும் அவர் குறிப்பிடவேயில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.