Header Ads



"நீங்கள் பிரதமராக தேர்வு, செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது" - மகிந்தவின் முகத்திற்கு நேராக கூறிய சம்பந்தன்


"நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது" என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரை சந்தித்தபோது கூறினார் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

இலங்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதையும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

"பெரும்பான்மை இருக்குமாயின் அதனை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றத்தை தள்ளிப்போடுவது சட்டத்திற்கு முரணானது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மகிந்த ராஜபக்சவும் ஆதரவளிக்க வேண்டும். அதன்பின்னர் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம்" என்று பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிடம் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.

3 comments:

  1. மூன்று பேர்கள் தான் அந்த இடத்தில இருந்தார்களாம், இனி சம்பந்தன் அய்யா சம்பந்தம் இல்லாமல் சொல்வதை கேட்டுத்தான் ஆக வேணும்.

    ReplyDelete
  2. மூன்று பேர் மட்டுமே சந்திப்பில் பங்கு கொண்டதாக செய்தியின் கடைசி வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியாயின் சுமந்திரன் அங்கு இருக்கவில்லை. சந்திப்பில் பங்கு கொள்ளாத சுமந்திரன் சொல்கிறார் மகிந்தவின் முகத்துக்கு நேரே சம்பந்தன் கேள்வி கேட்டாராம்.
    சுமந்திரனுக்கு எப்படி தெரியும் முகத்துக்கு நேராகவா அல்லது முதுகுக்கு பின்னாலா என்று?

    சம்பந்தன் நாட்டு நலனில் அக்கறையுள்ள எதிர்க்கட்சி தலைவர் என்றால் பகிரங்க மேடையில் உரத்து சொல்லி இருக்கலாமே.

    பகிரங்க மேடைதான் இன்று கொள்ளுப்பிட்டியில் இருந்ததே - அதில் ஏற சம்பந்தன் ஐயாவுக்கு ஏன் தயக்கம்???

    ReplyDelete
  3. Salute to you Mr. Sambandhan.

    ReplyDelete

Powered by Blogger.