Header Ads



சவுதியில் முதலீடுகள் குறித்த மாநாட்டுக்காக உருவாக்கப்பட்ட, இணையம் மீது ஹேக்கர்கள் தாக்குதல்

செளதியில் நடக்க இருக்கும் முதலீடுகள் குறித்த மாநாட்டுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தை ஹேக்கர்ஸ் தாக்கி உள்ளனர்.

செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் சீர்த்திருத்த செயற்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக முதலீடுகள் குறித்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

ஜமால் கஷோக்ஜி மரணத்தை ஓட்டி எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த மாநாடு இன்று தொடங்கி உள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் முடக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடனது இன்று முதல் அக்டோபர் 25 வரை செளதி தலைநகர் ரியாத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை ஒருங்கிணைப்பது செளதி அரேபியா இறையாண்மை வள நிதியம்.

செளதியில் உள்ள நிறுவனங்களுக்கு உறவுகளை உருவாக்கி தருவதற்காகவும், வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காகவும் இந்த மாநாடனது நடைபெறுகிறது.

தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உட்பட ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்காவை சேர்ந்த 140 அமைப்புகளின் 150 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தனர்.

ஆனால், ஜமால் கஷோக்ஜி விஷயத்தில் செளதியின் விளக்கம் நம்பகதன்மையற்றதாக இருப்பதாக அமெரிக்காவும், பிரிட்டனும் கலந்து கொள்ளாது என்று தெரிவித்து இருந்தது.

அதுபோல ஹெச்.எஸ்.பி.சியின் தலைமை செயலர் ஜான் ஃப்ளிண்ட், ஜேபி மோர்கன் தலைவர் ஜமியா டிமொன் மற்றும் ஸ்டேண்டர்ட் சேர்ட்டர்ட்யின் தலைமை செயலர் பின் விண்டர்ஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோமென முன்பே அறிவித்து இருந்தார்கள்.

அதுபோல, ஊபர், ஃபோர்ட், ஆகிய நிறுவனங்களும், ஊடக நிறுவனங்களான ப்ளோம்பெர்க், சி.என்.என் மற்றும் ஃப்னான்சியல் டைம்ஸ் நிறுவனமும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை ரத்து செய்திருந்தன.

ஜமால் கஷோக்ஜி கொலையில் செளதி சொல்லும் விளக்கங்கள் நம்புவதற்கு கடினமானதாக உள்ளன என்று கூறி சீமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோ கேஸர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து பின்வாங்கி உள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வோரின் பெயர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என செளதி அரசு தெரிவித்துள்ளது.

ஸ்விஸில் உள்ள டாவோஸில் ஆண்டுதோறும் நடக்கும் பொருளாதார சந்திப்பு போல இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள்ளது. 'பாலைவனத்தில் டாவோஸ்' என்று அழைக்கப்பட்டதி டாவோஸ் பெயரை பயன்படுத்துவதற்கு உலக பொருளாதார மன்றம் எதிர்ப்பு தெரிவித்தது.

No comments

Powered by Blogger.