Header Ads



சவூதி ஊடகவியலாளரின் கொலை ஆதாரத்தை, துருக்கியிடம் கேட்கும் டிரம்ப்

துருக்கியில் உள்ள சௌதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என்பதைக் காட்டும் பதிவுகள் இருந்தால் கொடுங்கள் என்று துருக்கியைக் கேட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது டிரம்ப் இதைத் தெரிவித்தார்.

அக்டோரபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்குள் சென்றதில் இருந்து கசோஜியைக் காணவில்லை. தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்றும், வந்த வேலை முடிந்து அவர் திரும்பிவிட்டார் என்றும் கூறுகிறது சௌதி அரேபியா.

2 comments:

  1. சவுதியை அடிபணிய வைக்க ட்ரம்ப் எடுக்கும் முயற்சி.

    ReplyDelete
  2. Do anyone remeber the lady who lost her job for showing middle finger to Trump vehicles in US after he became president?

    why they snatch her job? she had the freedom of expression? as per west law is it?

    ReplyDelete

Powered by Blogger.