Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நாளை அவசரமாக கூடுகிறது

கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து நாளை கூடி தீர்மானிக்க உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடன் இது குறித்து நாளை பேசவுள்ளதாக அவர் கூறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் பிரதமராக பதவியேற்றிருந்தார்.

இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தற்சமயம் கொழும்பில் முக்கிய பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.