Header Ads



உலகின் மிகப்பெரிய இஸ்தான்பூல், விமான நிலையம் அங்குரார்ப்பணம் - உலகத் தலைவர்களும் பங்கேற்பு


துருக்­கிய ஜனா­தி­பதி ரஜப் தைய்யிப் அர்­து­கா­னினால் பெரிய விமான நிலையத் திட்­ட­மொன்று இஸ்­தான்­பூலில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இத் திட்டம் முடி­வ­டை­யும்­போது உலகின் மிகப் பெரிய விமான நிலை­யங்­களுள் ஒன்­றாக இது இருக்கும்.

திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இஸ்­தான்பூல் விமான நிலையம் என அழைக்­கப்­படும் புதிய விமான நிலை­யத்தின் முதல்­கட்­டத்தின் பிர­மாண்­ட­மான அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் சுமார் 17 நாடு­களைச் சேர்ந்த 50 இற்கும் மேற்­பட்ட வெளி­நாட்டுப் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டனர் என உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­தன.

''இரு கடல்­க­ளுக்கும் இடையே அமைந்­துள்ள அழ­கான ஆப­ர­ணமே இஸ்­தான்­பூ­லாகும். அதனால் தான் நாம் இதனை இஸ்­தான்பூல் விமான நிலையம் என அழைக்­கின்றோம்'' என துருக்­கிய குடி­ய­ரசின் 95 ஆவது வருட நிகழ்­வோடு இணைந்­த­தாக இடம்­பெற்ற விமான நிலைய அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் அர்­துகான் தெரி­வித்தார்.

இஸ்­தான்பூல் விமான நிலை­யத்தை எமது நாட்­டுக்கு மாத்­தி­ர­மல்­லாது எமது பிராந்­தி­யத்­தி­லுள்ள ஏனைய நாடு­க­ளுக்கும், உல­கிற்கும் ஒரு முத­லீ­டா­கவே நாம் பார்க்­கின்றோம்.

இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டு அனைத்துக் கட்­டங்­களும் பூர்த்தி செய்­யப்­ப­டும்­வ­ரை­யான  அடுத்த தசாப்தம் வரை வளர்ந்­து­கொண்டு செல்லும் என அரச ஊட­க­மான அன­டொலு முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.

ஆசி­யா­வுக்கும் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடை­யே­யான பால­மாகத் திகழ்­வ­தாக இஸ்­தான்­பூலின் புவி­யியல் அமை­வி­டத்தை புகழ்ந்து பேசிய துருக்­கிய விமான சேவையின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி பிலால் எக்சி 'இஸ்­தான்­பூலில் புதிய விமான நிலை­யத்தை திறந்து வைப்­பது எதிர்­கா­லத்தில் இஸ்­தான்­பூ­லுக்கும் ஹொங் கொங்­கிற்கும் இடை­யே­யான கலா­சார மற்றும் வர்த்­தக உற­வு­களை மேம்­ப­டுத்து­வ­தற்­காக புதிய சந்­தர்ப்­பங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு மேலும் பங்­க­ளிப்புச் செய்யும்' எனக் குறிப்­பிட்டார்.

இந்த அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் கட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்­தானி, சூடான் ஜனா­தி­பதி ஒமர் அல்-­பஷீர் மற்றும் பாகிஸ்தான், கிர்­கிஸ்தான், கொசோவோ, மெசி­டோ­னியா, மொல்­டோவா, அல்­பே­ரியா மற்றும் சேர்­பியா ஆகிய நாடு­களின் தலை­வர்­களும் கலந்து கொண்­டனர்.

உல­க­ளா­விய வரு­டாந்த வான் போக்­கு­வ­ரத்து வீதம் 3.5 வீதத்­தினால் அதி­க­ரித்து வரு­வ­தாக தெரி­வித்­துள்ள சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்துச் சங்கம், இவ்­வ­ருடம் 4.1 பில்­லியன் பய­ணிகள் வான் வழி­யாகப் பய­ணிப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­கவும், இந்த எண்­ணிக்கை 2037 ஆம் ஆண்டு இரட்­டிப்­பாகும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

இஸ்­தான்­பூ­லி­லுள்ள விமான நிலை­யத்தில் ஆரம்­பத்தில் மூன்று ஓடு பாதைகள் மாத்­தி­ரமே இருக்கும். 2028 ஆம் ஆண்டு 500 விமான கொள்­ள­ளவு கொண்ட ஆறு ஓடு பாதைகள் இருக்கும் என குறித்த விமான நிலைய கட்­டு­மான மற்றும் செயற்­பாட்­டிற்குப் பொறுப்­பான ஐ.ஜீ.ஏ நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

76.5 மில்­லியன் சதுர மீற்றர் பரப்­ப­ளவில் அமை­யப்­பெ­ற­வுள்ள இவ் விமான நிலை­யத்தில் 70,000 கார்­களை நிறுத்­து­வ­தற்­கான வாகனத் தரிப்­பி­டங்­களும் அமைக்­கப்­படும். இவ் விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஒக்டோபர் இன்று 31 வெள்ளோட்டமாக இஸ்தான்பூல் இருந்து துருக்கிய தலைநகர் அங்காராவுக்கு விமானப் பயணம் இடம்பெறவுள்ளது.

இதனிடையே தற்போது இஸ்தான்பூலில் இயங்கிவரும் பிரதான விமான நிலையமான முஸ்தபா கமால் அத்தாது விமான நிலையம் இவ்வருட இறுதி வரை செயற்பாட்டில் இருக்கும் எனத் தெரிவித்த அர்துகான், அதன் பின்னர் வர்த்தக விமானங்களுக்கு அவ் விமான நிலையம் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.
-Vidivelli

3 comments:

  1. Nowadays Turkey on going to new era. Inshallah it's lead No 1 greatest and powerful economic country in Europe. Turkey must takeover Islamic leadership in the world. "KILAFATH" Regime start from Istanbul to whole over the world.

    ReplyDelete
  2. it is very proud for whole muslim around the world. Turkey is the true leadership for us, well wishes for turkey & the president usmaniya...

    ReplyDelete

Powered by Blogger.