Header Ads



தேர்தலை நடத்தும்வரை, தற்போதைய அரசாங்கத்தை முன்கொண்டுசெல்ல வேண்டும் - கோட்டாபய

தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் வரையில், தற்போதைய அரசாங்கத்தை முன்கொண்டுசெல்ல வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வழக்கு நடவடிக்கைக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையானபோது, ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிகளை தாங்கள் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகின்றது என ஊடகவியலாளர்கள் இதன்போது கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்துள்ள அவர், இது பொய்யான தகவல் என்றும், எவ்வாறான பதவியையும் தாம் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.