ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானியை, இரத்துச் செய்யுமாறு கோரி வழக்குத்தாக்கல்
நாடாளுமன்ற கூட்டத் தொடரை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்து ஜனாதிபதி வழங்கிய உத்தரவுகளை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி சட்டத்தரணி நாகனந்த கொடித்துவக்கு இன்று -30- உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவரசமாக பிரதமராக நியமித்ததுடன் எதிர்வரும் 6ஆம் திகதி கூடவிருந்த நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
தானே தற்போதும் நாட்டின் பிரதமர் எனவும் நாடாளுமன்றத்தில் தனக்கு ஆதரவாக 120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறார்.
இதனால், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
Excellent. All the Best..
ReplyDeleteFist of all we have to protect the country from dander.
Later we can again search for a great leader. Now all politicians are useless.. We are in need of well EDUCATED and well MANNERED LEADERS.