பொருத்தமான ஒரு தலைவரிடம், நாட்டை ஒப்படைக்க வேண்டும் - ஆனந்த தேரர்
தேசிய ரீதியிலும் சமய மற்றும் கலாசார ரீதியிலும் காணப்படும் சகல துறைகளிலும் ஒழுங்குகள் சீரழிந்துள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாடு முகம்கொடுத்துள்ள இந்த நிலைமையை சீர்செய்வதற்கு உடனடியாக பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடாத்தி, நாட்டைப் பொறுப்பேற்க பொருத்தமான ஒரு தலைவருக்கு நாட்டை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
Then MY3?
ReplyDelete