Header Ads



தகாத வார்த்தைகளால் திட்டி, தூசண மழை பொழிந்த பௌத்த தேரர் - மட்டக்களப்பில் அசிங்கம்

மட்டக்களப்பு - செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச மரம் ஒன்றின் கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியதாக கூறி இன்று மதியம் அவ்விடத்திற்கு செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கு நின்ற மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர், பிரதேச செயலாளரை மிக மோசமான தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கவும் முற்பட்பட்டுள்ளார்.

அதனை அவ்விடத்தில் நின்ற பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து தெரியவருவதாவது.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதான வீதியில் கடந்த 30 வருடங்களாக இராணுவ முகாமாக இருந்த பிரதேசம் தற்போது விடுவிக்கப்பட்டு அங்கு காணி உரிமையாளர்கள் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், பொது மக்களின் குறித்த காணியில் இராணுவத்தினர் வைத்து வழிப்பட்ட சிறிய புத்த கோயில் ஒன்றும் அதன் அருகில் பெரிய அரச மரம் ஒன்றும் உள்ளது.


குறித்த அரச மரத்தின் கிளைகள் மின்சார கம்பிகளில் மோதி குடியிருப்போருக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளது.

இந்நிலையில், பிரதேச செயலாளர் வனவள பரிபாலன சபையினரின் சட்ட ரீதியான அனுமதிகளை பெற்று அரச மரத்தின் சில கிளைகளை காணி உரிமையாளர்கள் வெட்டியுள்ளனர்.

அரச மரத்தின் கிளைகளை சட்டரீதியாக வெட்டிய காணி உரிமையாளர்களை கைது செய்யுமாறு ஏறாவூர் பொலிஸாரிடம் மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் காரணமாக பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில், மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அரச மரத்தை வெட்ட அனுமதி வழங்கிய பிரதேச செயலாளரை சம்பவ இடத்திற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதேவேளை, அங்கு சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் மீது அம்பிட்டிய சுமனரத்தின தேரர் இவ்வாறு தாக்க முற்பட்டுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்தில் பதற்றமாக சூழல் நிலவியுள்ளது.

8 comments:

  1. Good work done by the DS officer.keep it up the good work in East.

    ReplyDelete
  2. Aren't all equal before the law?

    ReplyDelete
  3. Rana Felip: Freedom fighters?? you mean ISIS terrorists?

    ReplyDelete
  4. Super Super அம்பிட்டி சமணரட்ணா சாமி.

    ReplyDelete
  5. Killing the Human But Protecting Cows..
    Hitting the Human But Protecting Tree branches

    Human being and their basic needs are nothing in front of Cows and Trees..?

    We hope for the respect of Human needs and their peaceful life..

    ReplyDelete
  6. காவித்தீவிரவாதிகள் மதத்தை அணுவளவேனும் பின்பற்ற மாட்டார்கள். எல்லாம் அரசியல் வியாபார நோக்கங்களை கொண்டவை.

    ReplyDelete
  7. Info X,
    என்னதான் இருந்தாலும் புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிராக செயட்படத்தில் இந்த சுமணரத்ன தேரரின் பங்களிப்பு என்பது அளப்பரியது. மீராவோடையில் தமிழர்களுடன் இணைந்து சட்டவிரோத குடியிருப்புகளை அகற்ற இந்த தேரர் செய்த நற் காரியங்களை நாங்கள் மறந்து விடவும் மாட்டோம்.
    Super super....

    ReplyDelete
  8. உங்களைப் போன்ற இனவாத தமிழர்களை சிங்களவன் ஆயிரம் தடவை முள்ளிவாய்காலில் போட்டு கொன்றாலும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு புத்தி சொல்ல முடியாது

    ReplyDelete

Powered by Blogger.