எனது மகன் கடத்தப்பட்டிருந்தால், எத்தகைய வேதனையை அனுபவித்திருப்பேன்
இராணுவத்தினரின் பெயரில் மனித கொலைகளை புரிந்த அனைவரையும் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தி மரண தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா – மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களில் ராஜூவ் நாகநாதன் என்ற ஒரு மருத்துவ மாணவன் இருந்துள்ளார்.
அந்த கால கட்டத்தில் சத்துர சேனாரத்ன மருத்துவ பீடத்தில் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்றார்.
சத்துர சேனாரத்ன அவ்வாறு கடத்தப்பட்டிருந்தால் எத்தகைய ஒரு வேதனையை அனுபவித்திருப்பேன் என்பதை தன்னால் உணரமுடியும்.
அதே உணர்வும் வேதனையும் காணாமல் ஆக்கப்பட்ட ராஜூவ் நாதனின் பெற்றோருக்கும் இருக்கும்.
கொலையாளி ஒருவர் ராணுவ வீரனாக முடியாது.
இராணுவ வீரன் ஒருவர் கொலையாளியாக முடியாது என இராணுவத் தளபதி மகேஸ்சேனா நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பணத்திற்காக மாணவர்களை கொல்கின்றவர்கள் இராணுவ வீரர்களாயின் இராணுவ வீரர்கள் என்பவர்கள் யார்?
எனவே 11 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment