இலங்கை முஸ்லிம்களின் கவனத்துக்கு - ஜெயபாலன்
மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்கியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம்.
மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களால் பிரபலப்படுத்தும் கருத்துக்கள் இன்று உலகெங்கும் பரவும் இஸ்லாமிய எதிர்ப்பு வைரஸின் ஊற்றாக உள்ளது. மேற்குலகின் பிரசாரங்களின் முக்கிய அம்சங்கள் சில...
1. முஸ்லிம்கள் குடும்ப கட்டுப்பாடை அனுசரிப்பதில்லை. அதனால் உயரும் முஸ்லிம்களின் பிறப்புவிகிதமும் அதிகரிக்கும் குடி வரவுடன் சேர்ந்து முஸ்லிம்களை ஒருநாள் ஐரோப்பாவில் பெரும்பாண்மை நிலக்குக் கொண்டுபோய்விடும்.
2. இஸ்லாமிய மதரசாக்கள் பயங்கர வாதத்தை தூண்டி நாற்றாங்கால்களாகி வளர்க்கின்றன.
3.ஐரோப்பாவில் நாங்கள் போராடிப் பெற்ற பெண்விடுதலைக்கு எங்கள் நாட்டிலேயே இஸ்லாமியர்கள் சவக்குழி தோண்டுகிறார்கள்.
4. அரசுக்குள் அரசுபோல எங்கள் அரசியல் யாப்புக்கும் மனித மற்றும் பெண்கள் உரிமைக்கும் எதிரான சட்ட திட்டங்களை அமூலாக்குகிறார்கள்.
மேற்கத்தைய இஸ்லாமிய எதிர்ப்பு மேற்படி அம்சங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்தகைய கருத்துக்கள் முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் வேகமாகப் பரவி நிலவும் இஸ்லாமியர் பற்றிய கொள்கைகளை வெகுவாகப் பாதித்து வருகிறது.இதனை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்த புதிய பிரச்சாரத்தின் ஆபத்துக்கள் பற்றிய விவாதங்கள் முஸ்லிம் மக்கள் மத்தில் பெரும்பாலும் இடம்பெற இல்லை. இச்சூழல் கவலை தருகிறது.
பல முஸ்லிம் நாடுகள் பல புதிய நிலமைக்கு முகம்கொடுக்கும் செம்மைப் படுத்தல்களை முன்னெடுத்துள்ளனர். முஸ்லிம்கள் சிறுபாண்மையாகவுள்ள நாடுகளின் பெரும்பாண்மைச் சமூகங்களும் அரசும் முஸ்லிம்கள் பற்றிய ஐரோப்பிய கருத்துக்களை மேல் புள்ளியாகவும் முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் சீர்திருத்தங்களை கீழ் புள்ளியாகவும் வைத்தே சிந்தித்து இயங்குகின்றன. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். .
முஸ்லிம் நாடுகளில் கைவிடபடுகிற நடைமுறைகளை முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளில் வலியுறுத்துவது நெடுநாளுக்கு சாத்தியமானதா எதிர்கால சந்ததிகளின் அமைத்திக்க்கு உகந்ததா என்பதுபற்றி முஸ்லிம்கள் சிந்திகவேண்டும். முஸ்லிம் நாடுகள் கைவிடும் விடயங்களை நாம் கைவிடமட்டோம் என பிடிவாதமாக பழமை வாதம் பேசுவது முஸ்லிம் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் நன்மையா தீமையா என்பதுபற்றி விவாதித்து முடிவெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.
கவிஞர் வாசுதேவனின் (
Vasu Devan) கட்டுரை.
மேற்குலகில் இஸ்லாம்
.
Vasu Devan
பிரான்சிலும் ஐரோப்பாவிலும் சனத்தொகை மற்றும் சனப்பெருக்கம் பற்றிய கோட்பாட்டை மையப்படுத்தி பாரிய விவாதங்கள் மீடியாக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முன்னெடுக்கப்படுவது அண்ணளவாக நாளாந்த விடயமாகிவிட்டது.
பொதுவாக மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாகப் பிரான்சில் "இஸ்லாமிய ஆக்கிரமிப்பு" எனும் விடயம் புத்தி ஜீவிகளால் மூர்க்கமான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது. இவ்வியடம் தொடர்பாக பல நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விவாதங்களின் வன்முறையானது ஒரு இனக்கலவரத்திற்கு முன்னிட்டுச் செல்லுமோ என்ற அச்சமும் ஏற்படாமலில்லை.
மேற்கு ஐரோப்பாவில் எழுந்து நிற்கும் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு நிலையும், தீவிர வலதுசாரிக்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பும் சமாந்தரமாகப் பயணிக்கின்றன.
ஐரோப்பாவில் 2016 ம் ஆண்டு செய்யப்பட்ட (மூலம்: மேடியாபாட்) கருத்துக்கணிப்பின் பிரகாரம் 25.78 மில்லியன் இஸ்லாமியர்கள் வாழ்ந்தார்கள் (முக்கிய நாடுகள்: பிரான்ஸ், சேர்மனி, அவுஸ்திரியா, சுவீடன் மற்றும் சுவிஸ் - கிழக்கில் குறிப்பாக பல்கேரியா).
2050 ம் ஆண்டில் ஐரோப்பாவில் வாழக்கூடிய முஸ்லீம்களின் எண்ணிக்கை தொடர்பான ஒரு கணக்கெடுப்பு மூன்று அடிப்படைகளில் மேற்கொள்ளப்பட்டது.
1) இறுக்கமான குடிவரவுக்கட்டுப்பாடு.
2) மத்திமமான குடிவரவுக்கட்டுப்பாடு.
3) இளகிய கட்டுப்பாடும், தாராள அகதிகள் வருகையும்.
முதலாவது நிபந்தனையில் 2050 ல் 35 மில்லியன் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் வாழ்வார்கள்- ஐரோப்பிய சனத்தொகையில் இது 7.4 விழுக்காடாகும்.
இரண்டாவது நிபந்தனையில் 2050 ல் 58 மில்லியன் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் வாழ்வார்கள்- ஐரோப்பிய சனத்தொகையில் இது 11.2 விழுக்காடாகும்.
மூன்றாவது நிபந்தனையில் 2050 ல் 75.5 மில்லியன் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் வாழ்வார்கள்- ஐரோப்பிய சனத்தொகையில் இது 14.0 விழுக்காடாகும்.
அண்ணளவாக 30 ஆண்டுகளின் வரவிருக்கும் இச்சனத்தொகை மாற்றமானது பாரிய கலாச்சார மாற்றங்களையும், அரசியல் திருப்பங்களையும் ஏற்படுத்தும் என்பதும் வெளிப்படையான உண்மையே. இம்மூன்று சூழ்நிலைகளிலும் எவற்றை ஆட்சியாளர்கள் நடைமுறைக்குக் கொண்டு செல்லவிருக்கிறார்கள் என்பதைப்பொறுத்து விளைவுகளும் மாறுபடலாம்.
இஸ்லாம் வெனுமனே ஒரு ஆத்மீக நிலைப்பாடக இல்லாது அது ஒரு சட்டக்கோவை என்ற அடிப்படையிலேயே இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது என்றும் ஆகவே இஸ்லாமியரின் வாழ்வுமுறை மற்றும் காலச்சாரம் போன்றவை ஐரோப்பியச் சனநாகயத்துடன் ஒருபோதும் ஒத்துப்போகதவை என்பதும் மேற்குலகப் புத்திஜீவிகளின் எண்ணமாக உள்ளது. பலர் அதை வெளிப்படையாகவும் விளம்ப ஆரம்பித்துள்ளார்கள்.
முக்கியமான இன்னொரு விடயத்தையும் இங்கு உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பின்னரான இஸ்லாமிய-யூத உறவுகளின் சீர்குலைவு அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் பகையுணர்வைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது. மேற்கைரோப்பாவில் இஸ்லாமிய-யூதப் பகையுணர்வு பல இடங்களில் வன்முறையாகக் கூட வெளிப்பாடடைந்துள்ளது. பலஸ்தீனம் பாதிக்கப்படும் போதெல்லாம் மேற்கு நாடுகளில் இஸ்லாமிய-யூத உறவு கொதிநிலைக்குச் செல்வது வழமையாகிவிட்டது.
இவ்விடயம் தொடரபாகச் சர்வசன ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறும் வேளைகளில் அவை இஸ்ரேலியர்களுக்கும பலஸ்தீனர்களுக்குமான விவாதம் போல் கொதி நிலைக்குச் செல்வதும் வழமையான விடயமே.
இப்பின்ணணியில், யூதப் புத்திஜீவிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கைப் பிரான்சில் பிரச்சாரம் செய்கிறார்கள் என இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்கள் தம்மை அச்சுறுத்துகிறார்கள் என யூதர்களும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
இஸ்லாமிய அச்சுறுத்தல் காரணமாக பிரஞ்சு யூதர்கள் இஸ்ரேலுக்குச் சென்று குடியேறுகிறார்கள் என்ற ஒரு கருத்து நிலைப்பாடு இருப்பினும் இது தொடர்பான எண்ணிக்கை அடிப்படையிலான ஆவணங்கள் காணக்கிடைக்கவில்லை.
எவையெப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளின் ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் இஸ்லாமிய எதிர்ப்புப்போக்கு தீவிரமடைந்துள்ளது வெளிப்படை உண்மையாகும். இஸ்லாம் தொடர்பான பாசிச உரையாடல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி மற்றும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறைச் சம்பவங்கள் போன்றவை இந்நிலப்பாடுகளுக்குப் பசளையிடுகின்றன என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.
வரவிருக்கும் கால்நூற்றாண்டுக்குள் பிரான்சில் ஒரு உள்நாட்டுப்போர் உருவாகும் என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இது தொடர்பாக மற்றைய ஐரோப்பிய நாடுகளின் உள்ளார்ந்த நிலையை அந்த அந்த நாடுகளில் வாழ்பவர்கள் பகிரவேண்டுகிறேன்.
I strongly agree with Mr. Jeyabalan. Muslims all over the world face such problems due to some fundamentalists.
ReplyDeleteExactly your correct Sir! Thank you for your kind attention in our community!
ReplyDeleteExactly your correct Sir! Thank you for your kind attention in our community!
ReplyDelete