Header Ads



அமைச்சர்களின் பெயர்கள், அம்பலப்படுத்தப்படும் வரையில் நாம் காத்திருக்கின்றோம்

இந்தியாவின் றோ உளவுப் பிரிவிற்கு எமது கட்சியைச் சேர்ந்த எவரும் தகவல் வழங்கியதில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய றோ உளவுப் பிரிவிற்கு இலங்கையின் நான்கு அமைச்சர்கள் தகவல் வழங்கி வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுன் தொடர்புடைய நான்கோ அல்லது அதற்கு மேற்பட்ட அமைச்சர்களோ ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வழங்கும் அமைச்சர்களின் பெயர்கள் அம்பலப்படுத்தப்படும் வரையில் நாம் காத்திருக்கின்றோம் என அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.