புல்லுமலை தொழிற்சாலை கைவிடப்பட்டது - தமிழ் உணர்வாளர்களின் மிரட்டலா காரணம்..?
மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் நிர்மாணிக்கப்பட்டுவந்த, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணிகளை, முற்றாகக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
“தொழிற்சாலை அமைக்கப்படுவதை, குறித்த பிரதேச மக்கள் எதிர்த்தனர்.
அதேபோன்று, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொழிற்சாலை அமைப்பதில்லை என எமது நிறுவனம் தீர்மானித்துள்ளது” என, அந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான முஹம்மட் அப்துல் ஜெஷீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, செங்கலடி, செல்லம் பிறிமியர் அரங்கில், நேற்று (22) இடம்பெற்ற, முக்கிய கூட்டத்துக்குப் பின்னர் நடத்திய, ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ரொமன்சியா லங்கா நிறுவனத்தின் உரிமையாளரான முஹம்மட் மும்தாஜ் மௌலவியின் சகோதரரும் நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான முஹம்மட் அப்துல் ஜெஷீம், முஹம்மட் அமீர், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேசத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “குறித்த தொழிற்சாலையுடன், காத்தான்குடி நகர சபைத் தவிசாளருக்கோ அல்லது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கோ எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. இந்தத் தொழிற்சாலையை அரசியல் மயப்படுத்த வேண்டாம். ஆனால், தொழிற்சாலையை வைத்து, சிலர் அரசியல் செய்கிறனர்” என்றார்.
“தமிழர்களும் முஸ்லிம்களும் எப்போதும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்தத் தொழிற்சாலையை வைத்து இனங்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த தமிழ் உணர்வாளர்கள், “குறித்த தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறுத்திக் கொள்கிறோம் என வெறுமனே கூறிக்கொள்ளாமல், எதிர்காலத்தில் எந்தவிதமான சட்ட விவாதங்களுக்கும் செல்லமாட்டோமென, நிறுவனத்தின் உரிமையாளர் கடிதம் எழுதி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.
பேரின்பராஜா சபேஷ், ஆர்.ஜெயஸ்ரீராம்
இலங்கையில் உணர்வில்லாமல் திரியும் ஒரு எருமை கூட்டமென்றால் அது முஸ்லிம்கள் தான். பேரினவாத சிங்கள பயங்கரவாதிகளுக்கு பயந்து சாவதை போல் இந்த ஒன்றுமில்லாத தமிழ் பயங்கரவாதிகளிடமும் மண்டியிட வேண்டியுள்ளது போல். இந்த நாட்டின் இறைமைக்கு எதிராக ஆயுதமேந்தி தீவிரவாதம் செய்த தமிழர்களுக்கு இன்று ஆர்ப்பாட்டம் மூலம் தங்களுடைய இனவாத கொள்கைகளை காப்பாற்றிக்கொள்ள முடியுமென்றால் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உழைத்து இன்றுவரை இந்த நாட்டின் இறைமைக்கு தீங்கு விளைவிக்காத முஸ்லிம்களுக்கு இந்த இனவாத கூட்டத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டமேனும் செய்ய வக்கில்லை என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். சும்மா போலியாக இல்லாத தமிழர் முஸ்லீம் ஒற்றுமை கிழக்கில் மேலோங்கியிருப்பதை போலும், அது சிதைவடையாமலிருக்க தமிழர்களிடம் பொன்னையர்கள் போல் மடிந்து போகும் பொய்யான சாக்கு போக்கை தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இனவாதிகளுக்கு அவர்களுடைய பாணியில் சென்று பதிலடி கொடுக்காதவரை இப்படி அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக இழக்க வேண்டியது தான். கேவலம் தமிழ் பயங்கரவாதிகள் கிழக்கில் குழப்பம் விளைவிக்க சிங்கள புலனாய்வுதுறையையே விலைக்கு வாங்கியது இன்று பகிரங்கமாக தெரிந்தும் எந்தவொரு ஜும்மாவின் பின்பும் ஒரு ஆர்ப்பாட்டம் செய்ய முஸ்லிம்கள் வக்கற்றவர்கலாக மாறிவிட்டார்கள்.
ReplyDeleteGood work.we should praise the company for listening to the people and giving up this project. We should thank some muslims who really supported for this protest against this factory.
ReplyDeleteThanks to all
If any body opposed the building of factory,he is not patriotic but traitor.What is the development mean not making road and carpet but making factories which generate jobs directly and indirectly.Also bring extra income for government and the people.
ReplyDeleteCountries developed by industrial revolution,not closing or stopping factories.India,Malaysia,Indonesia,Singapore,South Korea all gone past Srilanka,not only that once badly suffered Ethiopia, who's people died in starvation, too gone past Srilanka.
Now rupees is going down badly, that even lower than Nepali rupees is shame.It is to be stabilized only by GDP(Gross Domestic Product).Every countries aim is to increase the GDP.what is GDP is this type of industrial work and produce our needs locally.These racist Terrorist do not understand that what they are doing is not good for the country.
These two Racist people Tamils and Sinhalese is destroying the country by selling Srilanka to India and China.They do not know What is Macro economy and Micro Economy which is decide the value of rupees.There must be a strong Macro economy to have a strong ruppee.To have strong macro economy is through micro economy.Micro economy is individual and private institution,such as Factories and Business place apart from mega government project.So these terrorist never allow Srilanka to develop but want to fight and cannot live with any body.
They living in South and doing Business and having all the higher post yet hate the south and want to separate from the south great Human!
What I can Say is "Balla piduru kanneth nehe kana gonata denneth nehe"
படுவான் கரையை பாலைவனமாக்கும் இலங்கை ஜனாதிபதியே கவலை தெரிவித்த ஆபத்தான நிலத்தடி நீரை உறிஞ்சும் மக்கள்விரோத திட்டம் கைவிடபட்டமை மகிழ்ச்சி தருகிறது. இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்ட சூழலும் பொருளாதாரமும் இன நல்லிணக்கமும் பாதுகாக்கப் பட்டிருக்கிறது. மட்டகழப்பு மாவட்டம் குடிநீர் தேவைகளுக்காகவும் படுவான்கரை நீர்தேக்கங்களை நெடுநாளைக்கு நம்பி இருக்க முடியாது. இப்பவே குடிநீர்தேவைக்காக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் மட்டக் களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஆரம்பிக்கப் படவேண்டும்.
ReplyDelete