Header Ads



அல் பலாஹ் பாடசாலைக்கு, சகல உதவிகளையும் பெற்றுத்தருவேன் - சகாவுல்லா உறுதிமொழி

நீர்கொழும்பு போருதொட்ட அல் பலாஹ் மகாவித்தியாலய, விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கு மாணவர்களின்  செயல்முறை விடயங்கள் மற்றும் ஏனைய விடயங்களுக்கு பாடத் திட்டத்திற்கு அமைய அவசியப்படும்  பொருட்களை  மேல் மாகாண சபை உறுப்பினர் MSM சகாவுல்லா வழங்கிவைத்தார். அதனை  பாடசாலையின் அதிபர்  பெற்றுக்கொண்டார். 

இந்நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (19)  பாடசாலையில் நடைபெற்றது

அத்துடன்  2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை   எழுதி அதிகூடிய  177 புள்ளிகளை பெற்று சித்தி அடைந்த மாணவி ஹன்பாவுக்கும்,  150  இற்கு அதிகமான  புள்ளிகள்      பெற்ற   மாணவ மாணவிகளுக்கும்  பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது

இங்கு உரையாற்றிய மேல் மாகாணசபை உறுப்பினர் எம் எஸ் எம் சகாவுல்லா,   

வளர்ந்து  வரும் நமது  சந்ததியினர் சிறந்த கல்வியுடைய சமுதாயமாக அமையவேண்டும்.  அதற்காக  அரசியல் பிரமுகராக  அரசாங்கத்தினால் பெற்றுத்தரமுடியுமான அணைத்து விடயங்களிலும் தன்னால் ஆன முயற்சிகளை  மேற்கொள்வதாக  உறுதி வழங்கியதுடன் , பெற்றோர்களும்  ஆசிரியர்களும் மாணவர்களது  வழிகாட்டலுக்கு மிகவும் பக்கபலமாக இருந்து செயல்படவேண்டிய அவசியத்தையும் உறுதிப்படுத்தினார் .

இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான நஸ்மின்ரோஸ், கலந்து சிறப்பித்ததோடு பாடசாலையின் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் நலன் விரும்பிகள்    ஆகியோரும் பங்கேற்றனர்.


No comments

Powered by Blogger.