மகிந்தவின் செயலாளர், விடுத்துள்ள அறிவித்தல்
பொலிஸ், நிதி மோசடி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக ஒழுங்கான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரச உத்தியோகத்தர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களுள் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை நீக்கி அவர்களுக்கு பாதுகாப்பாக சுதந்திரமாக கடமையாற்றக் கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே தன்னுடைய முதல் கடமையென புதிய பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேக்கர தெரிவித்துள்ளார். இவ்வாறான நிறுவனங்களை உருவாக்கி கடந்த காலங்களில் நாட்டில் பல சதாப்தங்கள் சேவைசெய்த அரச உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். நாட்டில் நேர்மையாக சேவைசெய்யக்கூடிய அரச சேவையாளர்களை பாதுகாத்து அவர்களின் மனதுக்கு ஒரு நிம்மதியை ஏற்படுத்துவது இன்றைய தேவையாக உள்ளது என்றும் பிரதமரின் செயலாளர் தெரிவித்தார்.
செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சமன் ஏக்கநாயக்கவின் வெற்றிடத்துக்கு புதிதாக பிரதமரின் செயலாளர் எஸ். அமரசேக்கர நியமிக்கப்பட்டார் நேற்று தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்பவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களே. எனினும் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அரச உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையங்களுக்கும் ஊழல் மோசடி ஆணைக்குழுவுக்கும் கொண்டு செல்வதையே கடந்த காலங்களில் கண்டிருக்கிறேன்.
அரச உத்தியோகத்தர்கள் இதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர். கடமைகளை செய்வதற்கே அச்சமடைந்திருந்தனர். அரசாங்கத்துடன் ஒரு பிணைப்பு இருக்கவேண்டும். ஆனால் அது இருக்கவில்லை. மீண்டும் அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசுக்கும் இடையிலான ஒரு பிணைப்பை ஏற்படுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
So, let them do what they want/ like....Money money money.....!
ReplyDelete