Header Ads



இலங்கையில் அரசமைப்பை பின்பற்றுங்கள் - அமெரிக்காவும், பிரிட்டனும் வேண்டுகோள் வேண்டுகோள்

இலங்கையின் அனைத்து தரப்பினரும் நாட்டின் அரசமைப்பை பின்பற்றவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் மத்திய தென்னாசியாவிற்கான பணியகம் இந்த  வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையில் அனைத்து தரப்பினரும் நாட்டின் அரசமைப்பை பின்பற்றி செயற்படவேண்டும், என தெரிவித்துள்ள வன்முறைகளை தவிர்க்குமாறும் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் சீர்திருத்தம்,பொறுப்புக்கூறல் நீதி நல்லிணக்கத்திற்கான ஜெனீவா உறுதிமொழிகளை பின்பற்றவேண்டும் எனவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

2

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதை அடுத்து இலங்கை அரசியலில் குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கடமை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் மார்க் பீல்ட் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.