Header Ads



நீங்கள் தடிமலுக்கு, மருந்து எடுக்காதவரா...?

-தமிழில் ARM INAS-

சாதாரணமாக ஒரு குழந்தைக்கு வருடத்துக்கு 6 அல்லது 7 தடவைகள தடிமல் ஏற்படும். வளர்ந்தவர்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகளுக்கு தடிமல்ஏற்படும் தடவைகள் இருமடங்காகும். ஆனாலும் தடிமலுக்குரிய அறிகுறிகளான மூக்கு பாரமாதல், மூக்கில் சலி வடிதல், தும்மல் அதிகம் ஏற்படல் போன்றநோய் அறிகுறிகளை மருந்துகள் மூலம் இல்லாமல் செய்வதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதற்கே ஆதாரங்கள் அதிகம்.

இப்படி சாதாரண தடிமல்களை குணப்படுத்துவதற்கு என்று அதிகமான மருந்துகளை பாமசிகளில் காண முடிகிறது. ஆனாலும் அப்படியானமருந்துகளால் தடிமல் குணமடையும் என்பதற்கு எந்த ஆதாரபூர்வமான சாட்சிகளும் இல்லையனெ பீஎம்ஜீ (BMJ) சஞ்சிகை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் தடிமல் குணமாக்குவதற்காக இவ்வாறாக தரப்படும் பெரும்பாலான மருந்துகள் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பயன்படுத்துவதுஆபத்தை தரக்கூடும்.

ஒருவருக்கு தடிமலுடன் சேர்த்து தொண்டையில் வலி, கக்கல், மூக்குஅடைத்தல், உடம்பின் சூடு உயர்தல், அதிகம் தும்மல் ஏற்படல் போன்ற அறிகுறிகள்இருந்தாலும் சாதாரணமாக இவை ஒரு வாரகாலத்தில் தானாக சுகமாகிவிடும்.

சாதாரண தடிமல் மற்றும் அதற்கான நோய் அறிகுறிகள் ஏற்படுபது வைரஸ் தாக்கத்தினாலேயே. வைரஸ்களின் தாக்கம் நமக்குள் இருப்பது அதிகபட்சம்ஒருவார காலத்துக்கு மாத்திரமே. ஒரு வாரகாலத்தில் வைரஸின் செயற்பாடு இல்லாமல் போனதும் உடல் சாதாரண நிலைக்கு திரும்பிவிடும். என்றுபேராதெனிய சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் சன்ன த சில்வா தெரிவிக்கிறார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது சாதாரண தடிமலை மருந்துகள் மூலம் குணப்படுத்த முயற்சிப்பது பயனற்ற செயல் என்கிறார்.

ஆனாலும் மூக்கு அடைபடுவதால் குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் குழந்தையின் மூக்கினுல் சேலைன் துளிகள் இடுவது சிறந்த முறையாகஇருக்கும் என்று   (Royal College of Paediatrics and Child Health) என்ற நிறுவனத்தின் விசேட குழந்தை வைத்தியர் சோதாத்ரி கூறுகிறார்.

சேலைன் மூக்கினுல் செலுத்துவதன் மூலம் குழந்தையின் மூக்கடைப்பு இல்லாமல் போகும். சேலைனை குழந்தையின் மூக்கினுல் செலுத்துவதால் எந்தபக்களவிளைவுகளும் ஏற்படாது. ஒரு நாளைக்கு பல தடவைகள் வேண்டுமானாலும் இந்த வழிமுறையை கையாளலாம். மேலும் மூக்கடைப்புக்கும்மூக்குபாரமாதலுக்கும் இந்த வழிமுறை சிறந்த வழிமுறை என நிரூபிக்கப்பட்டுள்ளது என வைத்தியர் ராகுல் சௌத்ரி திட்டவட்டமாக கூறுகிறார்.

12 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு தடிமல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எந்தவித மருந்தும் கொடுக்க வேண்டாம் என்பதே வைத்தியர்களின்ஆலோசனை. அதனை மீறி மருந்துகளை கொடுக்கும் சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கு அதிக தூக்க கலக்கம் இன்னும் வேறுபட்ட பக்கவிளைவுகள் ஏற்படவாய்ப்பிருக்கிறது.

தடிமல் நோய்க்கு மருந்து பயன்படுத்துவது நல்லதல்ல. அதே போன்று வைரஸ் மூலமாக ஏற்படும் நோய்களுக்கு மருந்து மூலம் நிவாரணம் பெறமுயற்சிப்பதும் பயனற்ற ஒன்று. வைரஸ்களின் செயற்பாடு சில நாட்களுக்கு தொடரும். அதனை மருந்துகளால் நிறுத்த முடியாது என வைத்தியர் சன்ன திசில்வா சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் ஜக்கிய இராச்சிய குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுக்கான சுகாதார நிறுவனத்தின் வைத்தியர் ராகுல் சௌத்ரி தெரிவிப்பதாவது குழந்தைகள்பிள்ளகைள் மீது Antibiotics பயன்படுத்துவது வேறு பாதகமான பக்கவிளைவுகளுக்கு கொண்டு செல்லும் அபாயமுள்ளதாக சுட்டிகாட்டுகிறார்.

Antibiotics மருந்துகள் மூலம் வைரஸ்களின் தொழிற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது. அதுமட்டுமல்ல அவ்வாறான மருந்துகளை அடிக்கடி நீண்டகாலத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் தீராத தலைவலி, தீராக மூக்குடன் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் சௌத்ரிதெரிவிக்கிறார்.

சாதாரணமாக மூக்கடைப்பு இருக்கும் போது மூக்குக்கு ஆவிபிடித்தல்

(steam inhalation)   மூலம் சுகமடைய வைக்க முடியுமா என்று வைத்தியரிடம் கேட்டதற்கு. மூக்குக்கு ஆவிபிடிப்பதால் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கும்என்று உறுதிப்படுத்த முடியாது. ஆவிபிடிப்பதால் (steam inhalation)   மூக்கு அடைப்பு சுகமடையாது. அதன் மூலம் தற்காலிக சுகம் கிடைக்கலாம். அதேபோல் சூடான காற்று மூக்குக்குள் செல்வதால் மூக்கின் சில பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். பல்வேறான பாம்களை (Balm) பயன்படுத்துவதும்இதற்கான தீர்வு அல்ல என்று வைத்தியர் தெரிவித்தார்.

ஐவரஸால் ஏற்படும் சாதாரண தடிமலை விட பரம்பரைபரம்பைரயாக நீண்ட காலத்துக்கு இருக்கும் பீனஸ போன்ற மூக்குடன் சம்பந்தமான நோய்கள்வித்தியாசமானவை என்பதனால். அப்படியான நோய்களுக்கு வைத்தியரிடம் உரிய பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெறுவதே சிறந்தது.

ஆனாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் பீனஸ போன்றவற்றுக்கு சிகிச்சை பெற வேண்டியது சாதாரண வைத்தியர்களிடமல்ல. குழந்தைகளின் நோய்கள்தொடர்பில் விசேடமான வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெறுவது கட்டாயம். அப்படி சிகிச்சை பெறாதவிடத்து பிள்ளை வேறு பக்கவிளைவுநோய்களுக்கு உட்பட வேண்டியிருக்கும். என வைத்தியர் சன்ன த சில்வா தெரிவித்தார்.

https://www.bbc.com/sinhala/sri-lanka-45820021

No comments

Powered by Blogger.